கடந்த, ஆக., 30ல், காங்., தலைவர் ராகுல், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், 'ரபேல் விவகாரம் தொடர்பாக, பிரான்சில் குண்டுகள் வெடிக்கப் போகின்றன' என, கூறியிருந்தார். அது பற்றி, ராகுலுக்கு முன்பே எப்படி தெரியும் என்பது புதிராக உள்ளது.பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேவுக்கும், ராகுலின் பேச்சுக்கும் சம்பந்தம் இருப்பதுபோல் தெரிகிறது.
இதை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்றாலும், மனதில் சந்தேகம் எழுகிறது. தன்கருத்து தொடர்பாக, ஹாலண்டே முரண்பட்டு பேசிவருகிறார். ரபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்துசெய்யும் பேச்சுக்கே இடமில்லை. நாட்டின் ராணுவ தேவைகளுக்காக இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. ரபேல் விமானங்கள், இந்தியாவை நிச்சயம் வந்தடையும்..
மத்திய அரசின் பரிந்துரைப் படி, டசால்ட் நிறுவன பங்குதாரராக, ரிலையன்ஸ் டிபென்ஸ் சேர்க்கப்பட்டதாக, ஹாலண்டே கூறியிருந்தார். மற்றொருசமயம், 'ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, அரசு பின்கள வேலைசெய்ததா எனத் தெரியவில்லை. ரிலையன்ஸ் டிபென்சை பங்கு தாரராக சேர்க்கும் முடிவை, டசால்ட் நிறுவனம் எடுத்திருக்கலாம்' என, ஹாலண்டே கூறுகிறார். இவ்வாறு முரண்பட்ட கருத்துகளை அவர் கூறி வருகிறார். உண்மைக்கு இருவேறு முகங்கள் இல்லை.
நன்றி நிதியமைச்சர் அருண் ஜெட்லி
You must be logged in to post a comment.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
2organic