அயோத்தியில் ராமர்கோவில் நிச்சயம் கட்டப்படும் என கூறியுள்ள ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர் மோகன் பகவத், அதனை எதிர்க் கட்சிகளால் தடுக்க முடியாது என கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம், அரித்துவார் நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய மோகன் பகவத், ராமர் கோவில் கட்டுவதில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ.,வினர் ஒருமித்த கருத்துடன் இருப்பதாக கூறினார். ராமர் கோவில் கட்டுவதற்கு காலதாமதமாக கூடும். இதற்கு உகந்தகாலம் கைகூட சிறிது நேரம் ஆகலாம்.
ஏனெனில் ஒவ்வொரு அரசுக்கும் செயலாற்றக் கூடிய சில வரம்புகள் இருக்கின்றன. அந்த வரம்புக்குள்தான் அவர்கள் செயல்பட முடியும் என்றார். சாதுக்களுக்கும் ஜீயர்களுக்கும் அத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. மதம், நாடு மற்றும் சமூகத்தின் உயர்வுக்காக அவர்கள் பாடுபடவேண்டும் என பேசினார். ராமபிரான் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தெய்வம். எனவே அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை எதிர்க் கட்சிகளால் வெளிப்படையாக தடுக்க முடியாது என குறிப்பிட்டு பேசினார்.
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.