சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுதாக்கல் செய்வதில்லை என்று முடிவெடுத்துள்ள கேரள அரசுக்கு, எதிர்க் கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியன கடும்கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து திருவாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோருடன் காங்கிரஸ் மூத்ததலைவர் ரமேஷ் சென்னிதலா வியாழக் கிழமை ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் பி. ஸ்ரீதரன் பிள்ளை செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஐயப்ப பக்தர்களால் இந்த விவகாரத்துக்காக நடத்தப் படும் போராட்டத்தை பாஜக முழுவதும் ஆதரிக்கிறது. சபரி மலை ஐயப்பன் கோயிலின் முக்கியத்துவத்தை அழிக்கவும், சீர்குலைக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. சபரிமலை விவகாரத்தில் ஆணவமான போக்கை கைவிட்டு, உச்சநீதிமன்றத்தில் கூடிய விரைவில் மறு ஆய்வு மனுவை கேரள அரசு தாக்கல்செய்ய வேண்டும்' என்றார்.
பாஜக தலைவர் சோபா சுரேந்தர் கூறுகையில், "ஐயப்பன் கோயிலின் பாரம்பரியம், அங்கு நடக்கும் வழிபாடுகள் குறித்து கேரளத் திலுள்ள பெண்களுக்கு தெரியும்; இந்தவிவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டை பெண்கள் ஆதரிக்கமாட்டார்கள். இந்த விவகாரத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதில்லை என்று கேரள அரசு எடுத்துள்ள முடிவை கண்டிக்கிறோம். இது சபரி மலை ஐயப்பன் கோயிலை அழிக்க தீட்டப்பட்ட சதியாகும்' என்றார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.