ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு செய்வதில் நடந்த பணமோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கு சொந்தமான, 54 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
சிதம்பரம், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது, மத்திய நிதி அமைச்சராக. இருந்தார். கடந்த, 2007ல், ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற நிறுவனம், வெளிநாட்டு முதலீடு களைப் பெறுவதில், மோசடிகள் செய்ததாக, சிபிஐ., வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், கார்த்திக்கு சொந்தமான, 54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.