நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், “ நானும் பாதிக்கப்பட்டேன் ” என பொருள்படும் #MeToo என்ற விழிப்புணர்வு பிரசாரம் இணையதளத்தில் பரவி வருகிறது.
இதில் தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் உள்ளிட்ட பலரும் சம்பந்தப்பட்டுள்ளனர். சமீபத்தில் நானாபடேகருக்கு எதிராக தனுஸ்ரீ தத்தா அளித்திருக்கும் புகார்தான் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் பெரிதானதை தொடர்ந்து மத்திய அரசுக்கு கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், #MeToo என்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் அளிக்கப்பட்டிருக்கும் புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்ட கமிட்டி அமைக்கப்படும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தபிரிவின் அமைச்சராக மேனகா காந்தி உள்ளார்.
#MeToo பிரசாரம் குறித்து அவர் அளித்திருந்த பேட்டியில், விழிப்புணர்வு பிரசாரத்தில் 10-15 வயதுடையோருக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
#MeToo குறித்த பிரசாரம் முதன்முறையாக ஹாலிவுட்டில் தான் தொடங்கியது. ஹாலிவுட் படதயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டன்தான் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் முன் வந்து புகார்கள் அளிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். அதன் பின்னர், தொடர்ச்சியாக இந்தபிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.