வரும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக.,வுடன், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி வைக்கவுள்ளது. இது தொடர்பாக நம்பத் தகுந்த ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் ஆகியோர் 4 வாரங்களுக்கு முன்பு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது மக்களவை தேர்தல்கூட்டணி தொடர்பாகவும், சீட்டுபேரம் தொடர்பாகவும் பேசப்பட்டது.
இதில் முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து பாஜகவும், நிதிஷ்குமாரும் கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பீகாரில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் 16 தொகுதிகள் நிதிஷ் குமாருக்கு அளிக்கப்படவுள்ளது. அவரைதவிர்த்து ராம்விலாஸ் பாஸ்வான் கட்சிக்கு 5 சீட்டுகளும், உபேந்திர குஷ்வாஹா கட்சிக்கு 2 சீட்டுகளும் வழங்கப்படவுள்ளது என்று சில செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.