காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்துக்கு உட்பட்ட சுந்தர் பனி எல்லைப்பகுதி வழியாக கடந்த 21–ந்தேதி பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது அவர்களுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே பயங்கர துப்பாக்கிசண்டை மூண்டது.
இதில் ஊடுருவல்காரர்கள் 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேசமயம் இந்த மோதலில் இந்தியவீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் சம்பவத்துக்கு இந்தியா கடும்கண்டம் தெரிவித்தது.
இந்த நிலையில் இந்தவிவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் தூதரகத்தின் மூத்த அதிகாரிக்கு இந்தியா சம்மன்அனுப்பியது. அதோடு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பலமான எதிர்ப்பையும் பதிவுசெய்தது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை விவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், ‘‘பயங்கரவாத அமைப்புகளுக்கு உடந்தையாக இருந்துகொண்டு, அமைதியை விரும்புவதாக பொய் கூறி இந்தியாவை ஏமாற்றி வரும் பாகிஸ்தானுக்கு கடும்கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தங்கள் மண்ணில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவும் பாகிஸ்தானை இந்திய ராணுவம் எச்சரித்து இருக்கிறது’’ என கூறப்பட்டு உள்ளது.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.