கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1 கோடிக்குமேல் ஆண்டு வருமானம் கொண்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 60 சதவிகிதம் அதிகவளர்ச்சியாகும்.
2014-15 வரி செலுத்தும் ஆண்டில் மொத்தம் 88,649 பேர் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெற்றதற்கான வரிசெலுத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2017-18 வரிசெலுத்தும் ஆண்டில் 1,40,139 ஆக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இது வரையில் நேரடிவரியாக ரூ.4.89 லட்சம் கோடி வசூலிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் வருமான வரி மற்றும் நேரடி வரிகள் வாரியம் குறித்த விவரங்களை வருமான வரித்துறையின் ஒரு அங்கமான மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1 கோடிக்குமேல் ஆண்டு வருமானம் கொண்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 60 சதவிகிதம் வளர்ச்சியாகும். 2014-15 வரிசெலுத்தும் ஆண்டில் மொத்தம் 88,649 பேர் ரூ.1 கோடிக்குமேல் வருமானம் பெற்றதாக அதற்கான வரி செலுத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2017-18 வரி செலுத்தும் ஆண்டில் 1,40,139 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, மேற்கூறிய நான்கு ஆண்டுகளில் ரூ.1 கோடிக்குமேல் வருவாய் பெறுவதாகத் தெரிவித்த நபர்களின் எண்ணிக்கையும் 68 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2014-15 வரி செலுத்தும் ஆண்டில் 48,416 ஆக இருந்த அவர்களின் எண்ணிக்கை 2017-18ஆம் வரி செலுத்தும் ஆண்டில் 81,344 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவரான சுஷில்சந்திரா, கடந்த நான்கு ஆண்டுகளில் வரித் துறையின் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகளால் தான் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்த ஆண்டுகளில் வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையும் 3.79 கோடியிலிருந்து 6.85 கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.
இதேபோல 2018-19 நிதியாண்டின் அக்டோபர் மூன்றாவதுவாரம் வரையிலான வரி வருவாய் விவரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் அரசின் நேரடி வரிவசூல் ரூ.4.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான வரியைவிட 15.7 சதவிகிதம் அதிகமாகும்.
இந்த முழு நிதியாண்டில் மொத்தம் ரூ.11.5 லட்சம் கோடியை நேரடிவரி வாயிலாக வசூலிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அக்டோபர் மாத வரி வசூலுடன் இலக்கில் 42 சதவிகிதம் எட்டப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் ரீஃபண்ட் தொகையாக ரூ.1.09 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலம்வரையில் ரீஃபண்ட் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 62 சதவிகிதம் அதிகமாகும்.
இந்த நிதியாண்டின் அக்டோபர் 21ஆம்தேதி வரையில் மொத்தம் 5.8 கோடி வருமானவரி ரிட்டன்கள் தாக்கல் செய்யபட்டுள்ளன. முந்தைய ஆண்டில் இது 3.6 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டில் வருமானவரி வரம்புக்கள் புதிதாக 1.25 கோடிபேரை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.