இரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சிலை திறக்கப்பட்டது

குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய்பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். வண்ணமயமான விழாக்களுடன் இந்தசிலை திறக்கப்பட்டது.

இந்தசிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது. 

இதற்கான விழா ஏற்பாடுகள் மிக பெரிய அளவில் செய்யப்பட்டு இருந்தது. கண்ணை கவரும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டது. விடுதலை போராட்ட வீரரான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சிலை திறக்கப்பட்டுள்ளது.

சுதந்தரமடைந்த இந்தியாவுடன், பிரிந்துகிடந்த சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவின் இரும்பு மனிதர் என பெயர்பெற்றவர் சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் பிஸ்மார்க் என அழைக்கப்பட்ட வல்லபாய் படேலுக்கு மிகஉயர்ந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

   

நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கருகே, ஆற்றுத்தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, சீனாவின் புத்தர் சிலையை விட உயரம் கொண்டது.

 2013-ம் ஆண்டு இந்தசிலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதற்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்து இரும்பு, மண், தண்ணீர் சேகரிக்கபட்டது. 3 லட்சம் மண்மாதிரிகள் எடுக்கப்பட்டு பயன்படுத்தபட்டுள்ளது. இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட காரணத்தால், இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் இருந்து இவரின் சிலைக்காக இரும்பு கொண்டு வரப்பட்டது. ஆம் இந்த சிலைக்கு உள்ளே இருக்கும் இரும்பு பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டது. சுமார் 700 டன்கள் இரும்பு நாடுமுழுவதும் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.nநர்மதா டேமில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. 

இதை வடிவமைத்தது, பத்ம பூஷன் விருது பெற்ற சிற்பி ராம் வி சுடர். லார்சன் மற்றும் டொப்ரோ நிறுவனம் இதில் முக்கியபணிகளை செய்துள்ளது. இதை உருவாக்க 250 இன்ஜினியர்கள், 3400 பணியாளர்கள் உழைத்து இருக்கிறார்கள். இதை உருவாக்க மொத்தமாக 40 மாதம் ஆகியுள்ளது. இந்தசிலையை சுற்றி 20,000 சதுர மீட்டர் பரப்பில் செயற்கை ஏரியும் அமைக்கப்பட்டுள்ளது. 

சர்தார் வல்லபாய் பட்டேலின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரின் சிலை திறக்கப்படுகிறது.

தினமும் இதைபார்க்க 15,000 பேர் வருவார்கள் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 500 பேர் வரை இந்த சிலையை பார்க்க முடியும்.
 

இந்த சிலைக்கு உள்ளே கீழ்புறத்தில் பெரிய அருங்காட்சியகம் உள்ளது. இது பட்டேலின் நினைவாக உருவாக்கப்பட்ட மியூசியம் ஆகும். இதில் 40, 000 அரிய ஆவணங்கள் உள்ளது. 2000க்கும் அதிகமான புகைப்படங்கள் உள்ளது. பட்டேலின் வாழ்க்கையை பறைசாற்றும் பொருட்களும் இருக்கிறது. 

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...