ஊழல் மற்றும் கறுப்புபண விவகாரத்தை முன்வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நாடுமுழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள அத்வானியின் ரதயாத்திரைக்கு குஜராத் மாநில முதல்வர் மோடியின் தலைமையில் சிறப்பானவரவேற்பு தரப்பட்டது .
ஒருமாத காலமாக பயணதிட்டம் வகுத்துள்ள அத்வானி ரதயாத்திரை பீகாரில் துவங்கியது. தென்மாநிலங்கள் முழுவதும்
முடித்துவிட்டு இன்று குஜராத்தை சென்றடைந்தது. அவரை வரவேற்க்க மாநில_முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் பாரதிய ஜனதா தொண்டர்கள் பலர்_திரண்டிருந்தனர். அத்வானி மாநிலம் முழுவதும் இரண்டு நாள் சுற்றுபயணத்தை மேற்கொள்கிறார், இரண்டு நாட்களும் மோடி அத்வானியுடன் செல்கிறார்.
வரவேற்பு விழா பேரணிமேடையில் இருவரும் ஒருசேர அமர்ந்திருந்தனர். இருவருக்கும் இடையே யார்பிரதமர் வேட்பாளர் என்ற பிரச்னை உள்ளது என்ற வதந்திக்கு முற்றுபுள்ளியாக இது அமைந்துள்ளது .
{qtube vid:=Qfl9oVhl0ws}
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.