பூடான் நாட்டின் 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்குகு 4 ஆயிரத்து 500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பூடான் இடையேயான உறவின் பொன் விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில், பூடானின் புதியபிரதமரான லோதே ஷெரிங் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார். மூன்று நாட்கள் பயணமாக வியாழன் அன்று தில்லி வந்துசேர்ந்த அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் வெள்ளியன்று முறைப்படி பிரதமர் மோடி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் இருநாட்டு பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக் கிடையிலான நல்லுறவுகள் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசப் பட்டது.
இந்நிலையில் பூடான் நாட்டின் 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்குகு 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கபடும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பேச்சு வார்த்தைக்கு பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, பூடானின் 12-வது ஐந்தாண்டு திட்டத்திற்கு, இந்தியா சார்பில், 4 ஆயிரத்து 500 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
அதன்பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் பூடான் பிரதமர் சந்தித்தார்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.