சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சிகள்; தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதியே கூட்டணி அமைத்துள்ளதாகவும் நாட்டுநலனை கருதி அல்ல என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளதாக சமாஜ்வாதி கட்சியும் பகுஜன்சமாஜ் கட்சியும் அறிவித்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து கருத்துதெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உத்தரப்பிரதேசத்தில் உருவான கூட்டணியால் தேர்தல்முடிவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது தேர்தல் என்பது கணக்கு அல்ல.
தேர்தல் என்பது மனங்களை ஈர்க்கும் ரசாயனம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதியே கூட்டணி அமைத்துள்ளது நாட்டு நலனை கருதி அல்ல என்றார்.
You must be logged in to post a comment.
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
2consoles