சபரிமலை விவகாரத்தில் கேரளத்தை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசின் செயல்கள் வெட்கக்கேடானவை. இதுவரை எந்த அரசும், எந்த கட்சியும் செய்யாத செயல்களை சபரிமலை விவகாரத்தில் இடதுசாரி அரசு செய்துவிட்டது. இது வெட்கக்கேடான செயல். இந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்கமாட்டார்கள் என்று நமக்கு தெரியும். ஆனால் இந்த அளவுக்கு வெறுப்புணர்வை காட்டுவார்கள் என்று யாரும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள்.
சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது. கேரளத்தை ஆட்சிசெய்த ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இடதுசாரி கூட்டணி அரசுகள், மாநிலத்தை இனக்கலவரம் மற்றும் ஊழலுக்கான இடமாக மாற்றியுள்ளன. சபரிமலைவிவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒரு மாதிரியாகவும், கேரளத்தில் ஒருமாதிரியாகவும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கருத்துதெரிவித்து வருகிறது.
சபரிமலை விவகாரத்தில் கொண்டுள்ள இரட்டை நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் உள்ள கட்சிகளும் விளக்க மளிக்க வேண்டும் என்று சவால்விடுகிறேன். சபரிமலை விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு எப்போதும் ஒரே மாதிரியாக தான் உள்ளது. கட்சியின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் எந்தவேற்றுமையும் இருக்காது. கேரளத்தின் கலாசாரத்தை காப்பாற்ற நினைக்கும் ஒரேகட்சி பாஜகதான்.
காங்கிரஸும், இடதுசாரி கூட்டணி அரசும் பாலினநீதி குறித்து பேசுகிறார்கள். ஆனால் அவர்களது செயல் வேறு மாதிரியாக உள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி என்று வேறுவேறு பெயரில் கட்சி வைத்துள்ளார்களே தவிர கேரளத்தின் கலாசாரத்தை அழிப்பதில் ஒரேமாதிரிதான் செயல்படுகிறார்கள். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அவர்கள் இருவரும்.
முத்தலாக் முறை முஸ்லிம் இன பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி. பல இஸ்லாமிய நாடுகளில் அந்தமுறைக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. வாக்குவங்கி அரசியலுக்காகதான், கம்யூனிஸ்டும், காங்கிரஸும் இதற்கு ஆதரவளிக்கின்றன. பொருளா தாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஐக்கியஜனநாயக முன்னணியில் இருக்கும் இந்திய முஸ்லிம் லீக் யூனியன் கட்சி எதிர்ப்புதெரிவித்து வருகிறது. எந்த சமூகம், இனத்தில் பிறந்திருந்தாலும் அனைவருக்கும் சமமாக அனைத்தும் கிடைக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சமூக நீதிக்காக நாங்கள் உழைக்கிறோம். ஆனால் ஐக்கிய ஜனநாயக முன்னணி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
தற்போதைய நிலைமையில் பாஜகவை நினைத்து அவர்கள் சிரிக்கலாம். ஆனால் எனக்கு பாஜக தொண்டர்கள்மீது நம்பிக்கை உள்ளது. திரிபுராவில் கம்யூனிஸ்டை வீழ்த்தி வெற்றி பெற்றவாறு, கேரளத்திலும் நாங்கள் வெற்றிபெறுவோம். வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர்மோடி செவ்வாய்க் கிழமை கேரள மாநிலத்துக்கு சென்றிருந்தார். கொல்லம் நெடுஞ்சாலைக்கான அடிக்கல்லை நாட்டியபிறகு, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.