இவர் பெயர் திருமதி. அருள்மொழி சரவணன். மதுரையில் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கிறார். இவர் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் கடன் பெற்று சிறு அளவில் வியாபாரம் செய்து வந்தார்.
இதை தவிர அரசு கொள்முதல் செய்யும் e – Market Place {GEM} என்ற வெப்சைட்டிலும் இவரது நிறுவனத்தை பதிந்து வைத்துள்ளார். இவர் வியாபாரம் செய்யும் பொருட்களில் ஒன்றான தெர்மோஸ் வகை பிளாஸ்க்குகள் பிரதமர் அலுவலகத்தில் தேவைப்படுவதை ஜெம் வெப்சைட்டில் பார்த்து தான் விற்பனை செய்ய விரும்புவதாய் தகவல் அனுப்பியுள்ளார். பிரதமர் அலுவலகமும் அவருக்கு ஆர்டர் அளித்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சியில் முறைப்படி சப்ளை செய்து நன் மதிப்பை பெற்றார்.
முத்ரா கடன் பற்றி குறிப்பிடும் போது 2017 ல் பிரதமர் மன்கி பாத் நிகழ்ச்சியில் பெண்கள் தொழில் முனைவர்களாக உயர வேண்டியதின் அவசியத்தை இவரது பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளார். இதனால் இவர் வியாபாரம் செழித்து பல அரசு / தனியார் அலுவலகத்தில் இருந்து பல ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளது.
படிப்படியாக வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி அடைந்ததும் தொழிலை இன்னும் விரிவுபடுத்த எண்ணி முறையாக வரி செலுத்திய விபரங்களுடன் வங்கியை அணுகி மேலும் கடன் பெற்று இன்று இவரது வருட டர்ன் ஒவர் இன்று 1 கோடியை நெருங்கி விட்டதாம். 😮😮
தவிர திருமதி. அருள்மொழி சரவணன் தமது வியாபார மற்றும் குடும்ப வளர்ச்சியை பற்றி ஒவ்வொரு முறையும் பிரதமருக்கு பல கடிதங்கள் எழுதி இருக்கிறார். அதிலும் எப்போதும் பிரதமருக்கு கடிதம் எழுதும் போது “அன்புள்ள அப்பா” என்று குறிப்பிட்டே எழுதுவாராம்.
இந்நிலையில் பிரதமர் மதுரை வருவதை அறிந்ததும் தாம் வாழ்வு சிறக்கவும் குடும்பம் முன்னேற்றம் அடையவும் காரணமான முத்ரா வங்கி கடனே என்று அனைத்து விபரத்தையும் கடிதமாக எழுதி பிரதமரை நேரில் சந்தித்து நன்றி கூற வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு விருப்பமும் தெரிவித்துள்ளார்.
இதை அறிந்த பிரதமர் கண்டிப்பாக சந்திக்கிறேன் என்று பதில் கடிதமும் எழுதி இன்று தமது மதுரை விசிட்டில் திருமதி. அருள்மொழி சரவணனை சந்திந்து பேசியுள்ளார்.
அடுத்த திட்டம் என்ன? என்று பிரதமர் கேட்டதற்கு வீட்டு கடன் அப்ளை செய்துள்ளேன். விரைவில் புது வீட்டுக்கு குடிப் போக போகிறேன் என்று நன்றி கலந்த மகிழ்ச்சியை தெரிவித்த திருமதி. அருள்மொழி சரவணனுக்கு தமது வாழ்துக்களை தெரிவித்துள்ளார் பிரதமர்.
அதனால் தான் உரக்க கூவுவோம்.
கோ பேக் மோடி அதானேடா?
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.