பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 19-ம்தேதி கன்னியாகுமரி வருகிறார். ரூ.40 ஆயிரம்கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திறந்துவைக்கிறார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவை பலப்படுத்த பிரதமர் நரேந்திரமோடி முக்கிய நகரங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்துவருகிறார். தமிழகத்தில், மதுரை நிகழ்ச்சியில் பங்கேற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதுடன், பாஜக பொதுக் கூட்டத்திலும் பேசினார். பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூருக்கு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 19-ம்தேதி கன்னியா குமரிக்கு பிரதமர் வருவது உறுதி செய்யப் பட்டுள்ளது.
இதையடுத்து, கன்னியாகுமரியிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
பிரதமர் மோடி பிப்ரவரி மாதம் 19-ம்தேதி கன்னியா குமரியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அப்போது, ரூ.40 ஆயிரம்கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை திறந்துவைத்தும், அடிக்கல் நாட்டியும் அவர் பேசுகிறார்.
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.