யானை சிலை நிறுவிய செலவை மாயாவதி செலுத்த வேண்டும்

உ.பி.யில் முதல்வராக இருந்தபோது மாயாவதி தமது சிலைகளையும், தமது கட்சியின் சின்னமான யானை சிலைகளையும் அரசுசெலவில் வைத்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் செலவான அரசுப்பணத்தை மாயாவதி திரும்பச்செலுத்த உத்தரவு பிறப்புக்கப் போவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உ.பி.யில் மாயாவதி முதல்வராக இருந்தபோது மாநிலம் முழுவதும் தன்னுடைய சிலைகளையும், தன்கட்சியின் சின்னமான யானை சிலைகளையும் ஏராளமாக நிறுவினார். இதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு நிலவியது.

அரசுப்பணத்தில் சிலைவைத்துள்ளதை எதிர்த்து உ.பி.யைச் சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

சுய விளம்பரத்திற்காகவும், கட்சியை விளம்பரப்படுத்தவும் அரசுப் பணத்தை செலவிடுவதை நியாயப்படுத்த முடியாது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். செலவழிக்கப்பட்ட அரசுப்பணம் முழுவதையும் மாயாவதி திரும்பச்செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தப் பிரச்னையில் இன்னும் விரிவாக அலசி ஆராயவேண்டிய நிலை உள்ளது. அதனால் இறுதி உத்தரவு ஏப்ரல் 2-ந் தேதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...