இந்தியாவில் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் களை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்தவகையில் நேற்று முன்தினம், காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பியகாரை மோதி வெடிக்கச்செய்து கொடிய தாக்குதல் நடத்தினர்.
நாட்டையே உலுக்கி உள்ள இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது, பிரிவினைக்கு பின்னர் உருவான நாடு (பாகிஸ்தான்) பயங்கரவாத செயல்களை ஊக்குவித்துவருகிறது. தற்போது திவாலாகும் நிலையில், இருக்கும் அந்த நாடு, பயங்கர வாதத்திற்கு பெயர் பெற்றுள்ளது. புல்வாமாவில், வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகம் வீண்போகாது.
“சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எவ்வளவு தான் ஒளிந்துகொள்ள முயற்சித்தாலும், அவர்கள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள். பாதுகாப்பு படையினருக்கு முழுசுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு இன்னொரு பெயர பாகிஸ்தான். இந்த நேரத்தில், பாதுகாப்புபடையினர் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அமைதியாக இருக்கவேண்டும். குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது எங்கு, எப்போது நடவடிக்கை எடுப்பது என்பதுபற்றி பாதுகாப்பு படையினர் முடிவு செய்வார்கள் .வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினரின் வேதனை மற்றும் உங்களின்கோபத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். வீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது” என்றார்.
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.