ராகுலின் விமர்சனம் தமிழக பொறியாளர்களை அவமதிக்கும் செயல்

இந்தியாவிலே தயாரிப்போம் ( Make in India) திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு ரயில்வே தொழிற்சாலை தமிழக பொறியாளர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் என்ற பெயர் பெற்ற வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை சென்ற வாரம் டெல்லியிலிருந்து வாரணாசிக்கு நம் பாரதப்பிரதமரால் துவங்கி வைக்கப்பட்டது.

வந்தே பாரத் அதிவிரைவு ரயில் வாரணாசிக்கு குறிப்பிட்ட நேரத்தில் அடைந்து திரும்ப டெல்லிக்கு வரும் வழியில் டெல்லிக்கு 18 கி.மீ தொலைவில் துண்டுலா ரயில்வே நிலையத்தை தாண்டி சம்ருலா ரயில்நிலையத்திற்கு வரும்போது அடையாளம் தெரியாத பொருள் தாக்கியதால் கடைசி நான்கு பெட்டிகளுடைய தொலைத்தொடர்பு சாதனம் செயலிழந்தது . இதனால் ரயில் நிறுத்தப்பட்டு பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கியது.மேலும் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலில் 15 நாளைக்கு அனைத்து பயணசீட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன என்பதே அந்த திட்டத்திற்கு மக்களிடம் கிடைத்த மாபெரும் வெற்றிக்கு சான்று .

தமிழகத்தில் உருவான ரயிலை தோல்வியான திட்டம் என விமர்சித்து தமிழகத்தின் உழைப்பை தமிழர்களின் தொழிநுட்ப அறிவை அவமானப்படுத்திய ராகுல் காந்தி இந்தியாவிலே தயாரித்த திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டதாகவும் இதை அறிமுகப்படுத்திய மோடி அரசின் இந்த திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக ஒப்புக்கொண்டு இதை நிறுத்த வேண்டும் என்கிறார். ராகுல் காந்தி தமிழக ரயில்வே பொறியாளர்களை அவமானபடுத்தியதுடன் அவர்களுடன் சேர்ந்து உழைக்கும் பல்லாயிரம் ரயில்வே தொழிலாளர் களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை பறிக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டிருப்பது தவறு. தமிழகம்,தமிழர்கள்,தமிழின காவலர்கள் என சுய பட்டம் சூட்டிக்கொண்ட குடும்ப அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின் தமிழர்களின் தொழிநுட்ப அறிவை அவமானப் படுத்திய ராகுல் காந்தியை கண்டிக்காதது ஏன்?

மோடியின் தேர்தல் அறிக்கையில் கூறிய புதிய வேலைவாய்ப்புகள் எங்கே? என கேட்கும் ராகுல் – இந்தியாவிலே தயாரிப்போம் என்ற மோடியின் மந்திரத்துடன் வரும் புதிய வேலை வாய்ப்புகளை வேண்டாம் என மறைமுகமாக எதிர்ப்பதன் மூலம் ராகுலின் இரட்டை வேடம் அம்பலமாகிறது.

ராகுல் காந்தியின் இத்தகைய விமர்சனம் தமிழ்நாட்டு ரயில்வே பொறியாளர்களை அவமதிக்கும் செயலாகும் இதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது . ஏற்கனவே கலைஞர் கருணாநிதி காலத்தில் ராமர், சேது பாலத்தை விமர்சிக்கும் போது ராமர் என்ன எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று ஏளனம் பேசியதும் நினைவுக்கு வருகிறது. அதே பாணியில் இன்று ராகுல் காந்தி வந்தே பாரத் விரைவு ரயிலை வடிவமைத்த தமிழக பொறியாளர்களை அவமானப்படுத்தியிருக்கிறார். இதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது. ராகுல் காந்தி இக்கருத்தை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் டாக்டர்.தமிழிசை சௌந்தராஜன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...