130 கோடி மக்கள்தான் எனது குடும்பம்

எனதுகுடும்பம் என்பது 130 கோடி மக்கள்தான். வாழ்ந்தாலும் அவர்களோடுதான், வீழ்ந்தாலும் அவர்களோடுதான் என பிரதமர் நரேந்திரமோடி உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும்  பிரதமர் நரேந்திரமோடி பேசியது:

எனது குடும்பம் என்பது 130 கோடி மக்கள்தான். வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் அவர்களோடுதான். நாட்டுவளம், வளர்ச்சிக்காக எதையும் செய்வேன். அதற்காக உங்களின் ஆதரவையும், ஆசியையும் வேண்டுகிறேன்.

ஜெயலலிதா வழியில் தமிழக அரசு: உங்களது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்துகிறேன். அவர் தமிழகமக்களுக்கு செய்துள்ள பணி, பல தலைமுறைக்கும் நினைவு இருக்கும். அவரது வழியில் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

மதுரையில் இருந்து சென்னைக்கு மிகவேகமாகச் செல்லக்கூடிய தேஜஸ் ரயில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு எடுத்துக் காட்டாக முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. தற்போது பாம்பனில் புதியபாலம் கட்டப்படவுள்ளது.

உலகில் பொருளாதார ரீதியில் இந்தியா மிகவேகமாக முன்னேறி வருகிறது. இதற்கேற்ப, வளர்ந்துவரும் தலைமுறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. மிக பெரிய அளவில் ஆயுஷ் மான் என்ற மருத்துவ காப்பீட்டுத்திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் இதுவரை 1.10 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவில்,  திட்டம் அறிமுகப் படுத்திய 24 நாள்களுக்குள் செயல்படுத்தப் பட்டுள்ளது.

தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியதுபோல அரிய வாய்ப்புக் கிடைக்கும் போது அரிய செயல்களை செய்யவேண்டும். அதே போல 30 ஆண்டுகளுக்கு பின்பு, கடந்த 2014-இல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்குவந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பல சரித்திர சாதனைகளைச் செய்துள்ளது.

மக்கள் எதிர்பார்ப்பது நேர்மையான ஆட்சியைத் தான், குடும்ப ஆட்சியை அல்ல. முன்னேற்றத்தைத் தானே தவிர, பேரழிவை அல்ல.  பாதுகாப்பைத்தானே தவிர, கொள்கை தேக்கத்தை அல்ல. வாக்கு வங்கிக்கான அரசியலை அல்ல.

தமிழகம் நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலம். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மீனவர்களுக்காக தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியது. விவசாயக்கடன் அட்டை திட்டம், மீனவர்களுக்கும் விரிவுபடுத்தப் பட்டது. ஆழ்கடலில் மீன் பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்காக ரூ.300 கோடி மதிப்பில் மீன் பிடி களம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மீனவர்கள் கடலில் செல்லும் போது இஸ்ரோ மூலம் மீனவர்களுக்கு தகவல்களை அளிக்க சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் தங்களின் உள்ளூர் மொழியிலேயே மீன்வளம் குறித்த தகவல்கள் மட்டுமில்லாமல், வானிலை தகவல்களையும் பெற முடியும்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தைச் சேர்ந்தவர். விங்கமாண்டர் அபிநந்தன், தமிழகத்தில் பிறந்தவர். அண்மையில் காந்தி அமைதி விருது பெற்ற கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தை பாராட்டுகிறேன்.

கடந்த 2004 முதல் 2014 வரை ஹைதராபாத்,  ஆமதாபாத்,  மும்பை,  தில்லி,  புணே உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அப்போது மக்கள் எதிர்பார்ப்பை அன்றைய அரசு நிறைவேற்ற வில்லை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நடந்தது என்ன?  உரி,  புல்வாமாவில் நடந்த பயங்கரவாதச் சம்பவங்களுக்கு துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதற்காக, நமது விமானப்படை வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். ராணுவத்துக்கு முழுசுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் வேரோடு அறுக்கப்படும். பயங்கரவாதிகளுக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பித் தரப்படும்.

கடந்த சிலநாள்களாக ராணுவ வலிமையை எடுத்துக்காட்டும் விதத்தில் மக்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த ஆதரவுக்காக ஒவ்வொரு குடிமகனுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். துரதிருஷ்ட வசமாக, மோடி வெறுப்பை நாட்டு வெறுப்பாக சிலர் காட்டுகிறார்கள். ராணுவம் மீதும் சந்தேகப்படுகிறார்கள்.

சில கட்சிகள் சந்தேகிக்கின்றன. அவர்கள் பாகிஸ்தானுக்கு உதவியாகச் செயல்படுவதோடு, இந்தியாவை காயப்படுத்து கிறார்கள். பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும், வானொலியிலும் அவர்களது அறிக்கைகளை மேற்கோள் காட்டுகின்றனர். இவர்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். ராணுவத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா, சந்தேகிக் கிறீர்களா? ராணுவத்தை நம்புகிறீர்களா அல்லது பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்குத் துணை போகிறீர்களா? மோடி வரலாம், போகலாம். நாடு இருக்கும். அரசியலுக்காக நாட்டை  பலவீனப் படுத்தாதீர்கள். நாட்டின் பாதுகாப்பு மட்டுமே முக்கியம்.
ஊழலுக்கு எதிராக: தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுவாக்கு எண்ணிக்கை புகழ் முன்னாள் மத்திய அமைச்சர்,  அவரது குடும்பத்துக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் நிற்கிறார்.  ஊழல் வாதிகளுக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுக்கப் படுகிறதோ, அதேபோன்று நேர்மையாக வரி செலுத்துவோருக்கு அரசு சலுகைகாட்டுகிறது. ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரிசெலுத்த வேண்டாம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்தவர்கள் இதுகுறித்து சிந்தித்தார்களா?

காங்கிரஸ் ஆட்சியில் குடும்ப அரசியலுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் பயன் அளிக்கும் திட்டங்கள்தான் தீட்டப்பட்டன. அவர்கள் தான் முன்னேறினர். ஆனால், பொருளாதாரத்தில் திறமைக்கு முன்னேற்றம் அளிக்கப்பட வேணடும் என்று குரல்கொடுத்தவர் தமிழகத்தை சேர்ந்த ராஜாஜி.  மக்கள் ஆதரவாகக் குரல் கொடுத்தனர். அவரது கனவை நனவாக்கியது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான்.

காங்கிரஸ் அரசு, சமூக நீதியை உறுதிப் படுத்தியது இல்லை. அம்பேத்கரை இருமுறை தோற்கடித்தது காங்கிரஸ்தான். அம்பேத்கர் படத்தை, காங்கிரஸ் அல்லாத அரசுதான் திறந்துவைத்தது. மேலும் எஸ்.சி.,  எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தத்தையும் அரசு கொண்டு வந்துள்ளது. பொருளாதாரம், சமூக முன்னேற்றம் என்பது தேர்தல் கோஷம் அல்ல, எங்களது நம்பிக்கை. காங்கிரஸ் காரர்கள் வெட்கமே இல்லாமல் ஊழல் புரிந்தார்கள். தி.மு.க.,  காங்கிரஸ் கூட்டணி மத்தியில் பொறுப்பேற்ற போது அமைச்சர்களின் இலாகாவை நிர்ணயம் செய்தது யார்? பிரதமர் அல்ல. போன் மூலம் நிர்ணயித்த வர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும்.
வரும் மக்களவை தேர்தலில் இரு பிரதான பக்கங்கள் உள்ளன. ஒன்று பலம், ஸ்திரத்தன்மை. அடுத்தது பலவீனம், தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை. நம் தலைமை என்ன செய்தது என்பதை நாடு அறியும் என்றார் அவர்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.