ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பா.ஜ.கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் மத்திய மந்திரியும், தேர்தல்பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர் அப்போது மத்தியில் ஆண்டகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் ராணுவம் அனுமதிகேட்டது.
அதற்கு பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அனுமதி வழங்கவில்லை. ஆனால் புல்வாமாவில் தாக்குதல் நடத்தி 40 ராணுவ வீரர்களை கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள்மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முழுசுதந்திரம் வழங்கினார். எனவே இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
அதேபோன்று அணுகுண்டு சோதனை நடத்த நீண்டகாலமாக விஞ்ஞானிகள் அனுமதிகோரி வந்தனர். ஆனால் அப்போது இருந்த பிரதமர்கள் அனுமதி அளிக்கவில்லை.
அதன்பின்னர் 1999-ம் ஆண்டு பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பாய் அணுகுண்டு சோதனைக்கு அனுமதிவழங்கினார். இதுபோன்று பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இதுபோன்று பல்கலை கழகங்களில் 200 முக்கிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள், ராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.