குடும்ப கவுரவத்திற்காக காதலர்களை கொலைசெய்த 15 பேருக்கு மரணதண்டனை வழங்கி உ.பி,. மதுரா மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை தந்துள்ளது.
மதுரா மாவட்டத்தில் இருக்கும் பர்சானா_பகுதியை சேர்ந்தவர்கள் ரோஷினி, பிஜேந்தர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இருவரும் காதல திருமணம் செய்துகொள்ள
முயன்றனர். இந்த காதல்ஜோடிக்கு ராம்கிஷன் என்பவர் உதவிசெய்தார். இதற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது. ஊர்பஞ்சாயத்தார் கூடி ஜாதிமாறி திருமணம் செய்துகொள்ள முயன்ற காதல் ஜோடியையும், இதற்கு_உதவிய ராம்கிஷனையும் கவுரவ கொலை செய்ய உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து கடந்த 91ம் ஆண்டு இந்த மூவரையும் மரத்தில் தொங்கவிட்டு தீ வைத்து கொளுத்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்அதிர்ச்சி ஏற்படுத்தியது
இந்நிலையில் இந்தவழக்கை விசாரித்த மதுரா மாவட்ட செஷன்ஸ் நீதிபதி இந்தவழக்கில் தொடர்புடைய 34 பேரில், 15 பேருக்கு மரணதண்டனையும், 19 பேருக்கு ஆயுள்தண்டனையும் விதித்து தீர்ப் பளித்தார் ஒருவர் இந்தவழக்கிலிருந்து விடுவிக்கபட்டார்.
கவுரவ கொலை செய்பவர்களுக்கு மரணதண்டனை அளிக்கவேண்டும், என்று சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் கருத்துதெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.