மக்களவை தேர்தலில் போட்டியிடும் 48 வேட்பாளர்கள் அடங்கிய 6வது வேட்பாளர்பட்டியலை பாஜக வெளியிட்டு இருக்கிறது. தலை நகர் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தபட்டியலை வெளியிட்ட மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பாஜக சார்பில் 47 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் கர்நாடக மாநிலத்தில் மாண்டியா தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும் கூறினார். இந்த பட்டியலில், பாஜகவின் இரண்டு மூத்த தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் துணை சபாநாயகராக இருந்த கரிய முண்டாவிற்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்பட வில்லை. அவர் போட்டியிட்ட குந்தி தொகுதியில், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் அர்ஜுன் முண்டா போட்டியிடுகிறார். இதேபோன்று இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சாந்தா குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவரது அமைச்சரவையில் போக்குவரத் துறை அமைச்சராக இருந்த கிஷான் கபூர், காங்ரா தொகுதியில் களமிறக்கப் பட்டுள்ளார்.
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.