மக்களின் ஆதரவு இல்லாமல் நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால், வளர்ச்சி பணிகளைச் செய்யமுடியாது. வரும் மக்களவை தேர்தலில் பாஜக தொண்டர்களின் ஆதரவு, மக்களின் ஆதரவும், ஆசியும் எங்களுக்குத்தேவை.
ஓடிசா மாநிலத்தில் எந்த விதமான மாற்றத்தையும் கொண்டு வராமல் எந்த விதமான மேம்பாட்டு பணிகளையும் செய்யமுடியாது.
இளைஞர்கள் மற்றும் ஏழைமக்களின் நல்வாழ்வுக்காக எங்கள் அரசு பாடுபடுகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்தால் ஒடிசா இரட்டைவளர்ச்சியை பெறும். இங்குள்ள பழங்குடியினர், விவசாயிகள், இளைஞர்களுக்கு தேவையான வருமானம் கிடைத்தால் மட்டுமே வலிமையுள்ள மாநிலமாக ஒடிசா மாறமுடியும்.
மக்களின் ஆதரவு இல்லாமல் எங்களால் எந்தமுன்னேற்ற திட்டத்தையும் முன்னெடுத்து செல்லமுடியாது.
விண்வெளியில் நமது செயற்கைக்கோள்களைப் பாதுகாக்க நாங்கள் காவலாளியை (சவுகிதார்) உருவாக்கி இருக்கிறோம். நமது செயற்கைக்கோளுக்கு ஊறுவிளைக்கும் எந்த செயற்கைக் கோளையும் தாக்கி அழிக்கும் வல்லமை உடைய ஏவுகணையைக் கண்டுபிடித்துள்ளோம். அதற்கான மிஷன் சக்தி சோதனையையும் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளோம்.
ஆனால், விண்வெளியில் நாம் படைத்த சாதனையை எதிர்க்கட்சிகள் இகழ்ந்து பேசுகிறார்கள். நம்முடைய ஏ-சாட் தொழில்நுட்ப சாதனையை இழிவாகப்பேசும் எதிர்க்கட்சிகளுக்கு தேர்தலில் தகுந்த பதிலை நீங்கள் அளிக்கவேண்டும். உறுதியான முடிவுகளை அரசு எடுப்பதற்கு பெரும்பான்மை அரசு தேவை. குரல்கொடுப்பதற்காக அரசு அல்லாமல் நிலையான அரசு அமைய வாக்களிக்க வேண்டும்.
உங்களுக்கு வலிமையான அரசு வேண்டுமா அல்லது உதவிசெய்ய இயலாத அரசு வேண்டுமா என்பதை பார்த்து வாக்களியுங்கள்.
பாலகோட்டில் நமது விமானப்படை நடத்திய தாக்குதல் நடத்தி ஒருமாதம் ஆகிவிட்டது. ஆனால், பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளின் உடல்களை இன்னும் கணக்கிடுவதில் தீவிரமாக இருந்துவருகிறது. ஆனால், நம்முடைய எதிர்க்கட்சிகள் அந்த தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கிறார்கள்.
தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா செயல்படும் போது, நேரடியாக எதிரிகளின் இடத்துக்கு சென்று அவர்களை தாக்குவோம். ஆனால், சிலர் அதற்கு ஆதாரம்கேட்கிறார்கள்”.
இவற்றை எல்லாம் நாம் சகித்துக்கொள்ள வேண்டுமா? நமது படைகளின் வீரத்தையும், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும் இழிவாக பேசும் இவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிக்கவேண்டும்.
வெற்று கோஷங்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் வேண்டுமா? அல்லது, துணிச்சலான முடிவெடுத்து தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம் வேண்டுமா? என்பதை யோசித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.
ஒடிசா மாநிலம், கோரபுட் மாவட்டம், ஜேப்பூரில் நடந்த பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.