17-வது மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
வரும் மக்களவைத் தேர்தல் உண்மைக்கும், ஊழலுக்கும் இடையே நடைபெறும் போட்டி. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் முழுவதும் பொய்கள்நிரப்பியவை. அக்கட்சி வெளியிட்டது தேர்தல் அறிக்கை அல்ல; பொய்களால் நிரம்பிய ஆவணம்.
ஆனால், கடந்த 2014 மக்களவை தேர்தலில் நாங்கள் அளித்த வாக்குறுதிபடி, 18,000 கிராமங்களிலும் 1,000 தினங்களில் மின்சாரவசதி செய்துத்தரப்பட்டது.
தேசியக் கொடியை அவமதிப்பவர்கள், நாட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்புபவர்கள், சட்டமேதை அம்பேத்கரின் சிலைகளை சூறையாடுபவர்கள் ஆகியோருக்கு காங்கிரஸ்கட்சி ஆதரவு அளித்து வருகிறது. காங்கிரஸ்போன்று பொய்யான வாக்குறுதிகளை பாஜக அளிக்காது பாஜகவின் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 2019 மக்களவைத்தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்படுகிறது. தில்லி உள்ள பாஜக தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை தேசியதலைவர் அமித் ஷா வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 8ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது பாஜக.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.