பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
அப்போது பாஜக அரசின் மீது இஸ்லாமியர்கள் நம்பிக்கை வைக்காதது பற்றி உங்கள்கருத்து என்ன என்ற கேள்விக்கு பிரதமர் மோடி, “நான் இஸ்லாமியர்களுக்காக எதுவும் செய்ய வில்லை. அதேபோல இந்துக்களுக்கும் தனியாக எதையும் செய்ய வில்லை. என்னுடைய ஒரேஇலக்கு என்னவென்றால் 2022க்குள் எல்லா குடும்பத்திற்கும் சொந்தமாக ஒருவீடு இருக்க வேண்டும் என்பது மட்டுமே. அது இந்துவாக இருக்கலாம் இஸ்லாமியர்களாக இருக்கலாம்.
அனைவருக்கும் வீடும் கிடைக்கவேண்டும். மின்சாரமும் கிடைக்க வேண்டும். என்னுடைய அரசை பொருத்த வரையில் மதத்திற்கு இடம் கிடையாது. ஆனால் ஒருசிலர் வாக்குகளை கைப்பற்றும் நோக்கத்தில் மதத்தை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவது பற்றி நான் மட்டுமல்ல.. அனைவருமே ராமர்கோவில் கட்டப்படவேண்டும் என விரும்புகின்றனர். இதில் தீர்வு ஏற்பட நாம் சுப்ரீம்கோர்ட் முடிவு எப்போது வெளிவருகிறதோ அது வரை காத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
Leave a Reply
You must be logged in to post a comment.