தி.மு.க.,வை சுழற்றி அடிக்க போகும் புது புயல்…

இதுவரை எந்த தேர்தலிலும் காணாத அளவுக்கு இந்த முறை, தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது மதம்.

இதில் வேடிக்கை என்ன என்றால், மதங்களை நம்பாத பகுத்தறிவு வாதிகளாக தங்களை முன்னிலைப் படுத்துபவர்களே, இந்த சூழ்நிலையை உருவாக்கியது தான்.

பா. ஜ., ஒரு இந்து கட்சியாக பார்க்கப்படுவதால், சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுகள் அக்கட்சிக்கு குறைவாக கிடைக்கிறது. அதே சமயம், இந்துக்கள் எந்த தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக, ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது எதிராக ஓட்டு போடுவது இல்லை. இதனால், பா.ஜ., அல்லாத கட்சிகள் இந்து ஓட்டுகள் குறித்து அலட்டிக் கொண்டது இல்லை. இந்த தேர்தல் அந்த சூழலை மாற்றி இருக்கிறது.

கருணாநிதி மறைவுக்கு பிறகு, தி.மு.க.,வின் தலைவரான ஸ்டாலின், திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ அடிக்கடி, இந்து மதத்தை மட்டம் தட்டி பேசி வருகிறார். செயலிலும் அந்த வெறுப்பை வெளிக்காட்டுகிறார். முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிக்கு போனால்கூட, இந்து மத சடங்குகளை கேலி செய்து பேசும் அளவுக்கு, இந்து விரோத எண்ணங்கள் அவரது மனதில் நிறைந்திருக்கின்றன. மற்ற மதச் சின்னங்களை சரளமாக அணிந்து கொள்ளும் ஸ்டாலினால், இந்து கோவிலின் அர்ச்சகர்கள் தீட்டிய நாமத்தை சில நிமிடங்கள்கூட, நெற்றியில் விட்டுவைக்க பொறுமை இல்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய இந்து விரோத நிகழ்வுகள், இதுவரை பெரும்பாலும், பிராமணர்களால் மட்டுமே கண்டிக்கப்பட்டன. ஆண்டாள் மீதான வைரமுத்துவின் அவதுாறு, கிருஷ்ணர் மீதான, வீரமணியின் கேவலமான பேச்சு போன்றவை, பிராமணர் அல்லாத இந்துக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பா. ஜ., மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஸ்டாலினுக்கு ஆத்திரம் வந்தால், அந்தக் கட்சியோடும், அதன் தலைவர்களோடும் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தும் வகையில், இந்து மதத்தையும் கடவுளையும், சடங்குகளையும் அசிங்கமாக கேலி செய்வது முறையா என இந்துகளில் பெரும்பான்மையினர் கேட்கின்றனர்.

சமூக வலைதளங்களில் முழு நேரத்தையும் செலவிடும் அறிவுஜீவிகள், இந்துகளை ஒன்றினைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த செயல்கள் ஜாதிகளைத் தாண்டி ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இன்று விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தினமும் வீட்டிலோ, கோவிலிலோ சாமி கும்பிடத் தவறாத பெண்கள், இந்த விஷயத்தை எப்போதும் இல்லாத அக்கறையுடன் விவாதிக்கின்றனர். ‘ஏட்டிக்கு போட்டியாக எதுவும் சொல்லாமல், செய்யாமல் விடுவதால் தான், ஸ்டாலினுக்கும் அவரை வழிநடத்துபவர்களுக்கும் குளிர்விட்டு போய்விட்டது. குறைந்தபட்சம், நமது வலியை அவருக்கு உணர்த்தும் வகையில், இந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்ற நிலைப்பாடு எடுப்போம்’ என, இந்துக்கள் முடிவு எடுத்து வருகின்றனர்.

‘தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவோம்’ இல்லை என்றால், ‘தி.மு.க.,வை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். வீரமணியின் பேச்சை, ஸ்டாலின் மனப்பூர்வமாகவும் தெளிவாகவும் கண்டிக்க மறுத்த பின், இந்த பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. யார் சொன்னதையோ கேட்டு முதல்வர் மீது கொலைக்குற்றம் சாட்டத் தெரிந்த ஸ்டாலினுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாக கிருஷ்ணரை, வீரமணி அவதுாறாக பேசியது புரியவில்லையா என பலரும் ஆவேசமாக கேட்கின்றனர்.

ஊர் ஊராக இந்துக்கள் ஒன்றுகூடி, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்குள் இதன் வேகமும், தாக்கமும் அதிகமாகும் என்பது தெரிகிறது. நிலைமை சீரியசாகி வருவதால், தி.மு.க., மேலிடத்தில் மிரட்சி தோன்றியுள்ளது. ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அவரது தங்கை கனிமொழி, ‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்’ என, பேசுகிறார். தி.மு.க.,வுக்கு எதிராக, இந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும், அகோபில மடம் சார்பில் நடத்தப்படும், ‘நரசிம்மப்ரியா’ என்ற ஆன்மிக பத்திரிகையின் ஆசிரியர் அனந்த பத்மனாபாச்சாரியாருடன் பேசினோம்.“இந்து மத சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்துவது, ‘இந்து என்றால் திருடன்’ என, விளக்கம் கூறுவது, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசுவது, கிருஷ்ணரை அவதூறாக பேசுவது, நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டவர்களை கேலி பேசுவது, கோவிலில் திருநீறு பூசினால் அதை அழிப்பது என, ஸ்டாலினும் அவரது அடிப்பொடிகளும், இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகின்றனர்.”பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா? இந்துக்கள் இப்போது பொங்கி எழுகின்றனர்.

இந்த தேர்தலில், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை விட, யாருக்கு ஓட்டு போட கூடாது என்பதை இந்துக்களிடம் எடுத்துச் சொல்ல, தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தி.மு.க.,வை எதிர்ப்பதால், வேறு ஏதாவது கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், எந்தக் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.”என்ன பேசினாலும், அந்த பொருளில் பேசவில்லை என்று கடைசி நேரத்தில், ஒரு விளக்கம் கொடுத்து விட்டால், இந்துக்கள் அதை நம்பி நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் கருணாநிதிக்கு இருந்தது. அதை, அவர் பல தேர்தல்களில் பயன்படுத்தி விட்டார். ஸ்டாலினால் அந்த அளவுக்கு சிந்திக்க தெரியவில்லை. ஒரு கண்டன அறிக்கையைக்கூட, மக்கள் நம்பும் வகையில் எழுதிக் கொடுக்க அவரிடம் ஆட்கள் இல்லை.”இனியும், இளிச்ச வாயர்களாக இருந்து ஏமாற, இந்த கால இந்துக்கள் தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வரும் போது, எங்கள் முயற்சியின் சக்தி உலகத்துக்கு தெரியும்,” என்றார் ஆச்சாரியார்.

மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.க., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்? இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர்.

தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கிறது என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது என்கிறார்.

நன்றி தினமலர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.