ஊடுருவல்காரர்கள் கரையான் போன்றவர்கள்

ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடக்கும் வேளையில், அந்தமாநிலத்துக்கு தனிபிரதமர் வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா, அவரின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆகியன கோருகின்றன. ஒருநாட்டுக்கு 2 பிரதமர்கள் இருப்பது சாத்தியம் என நினைக்கிறீர்களா? ஒமர் அப்துல்லா கோரிக்கை குறித்து பதிலளிக்கும்படி ராகுல் காந்தியிடம் நான் கேட்டிருந்தேன். ஆனால் அவர் மௌனமாக இருக்கிறார்.

மத்தியில் மோடி தலைமையில் அரசு தற்போது ஆட்சியில் உள்ளது. அடுத்த அரசும் அவரது தலைமையில் தான் அமைய இருக்கிறது. ஒருவேளை மத்தியில் பாஜக ஆட்சியில் இல்லாமல் போனாலும், பாஜகவை சேர்ந்த கடைசித்தொண்டர் உயிரோடு இருக்கும் வரையிலும், காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்கமுடியாது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, காஷ்மீர். அப்படியிருக்கையில் இந்தியாவுக்கும், காஷ்மீருக்கும் தொடர்புகிடையாது என்று யாரேனும் தெரிவித்தார்கள் எனில், அவர்களை நாட்டு மக்கள் சகித்துகொள்ள மாட்டார்கள்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 ஆவது சட்டப் பிரிவை நீக்க காங்கிரஸும், தேசிய மாநாட்டுக்கட்சியும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. ஆனால் பாஜகவின் தேர்தல் அறிக்கையில், அந்த சட்டப்பிரிவு நீக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.
தேசியகுடிமக்கள் பதிவேடு கொண்டு வரவேண்டாம் என காங்கிரஸ் தெரிவிக்கிறது. ஆனால் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசை நீங்கள் மீண்டும் தேர்வுசெய்தால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத் முதல் அஸ்ஸாம் வரையிலும் ஊடுருவல்காரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப் படுவார்கள்.

ஊடுருவல்காரர்கள் கரையான் போன்றவர்கள். அவர்களால் நமது தேசத்தின் பாதுகாப்புக்குதான் அச்சுறுத்தல். அவர்களை நாட்டைவிட்டு விரட்டியடிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது. நமது நாட்டின் எல்லைப் பகுதிகள் பாதுகாப்பாக இருக்க மோடி அரசு சிறப்பான பணிகளை செய்துள்ளது. புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்நடத்தி 40 வீரர்களை கொன்றபோது, நாட்டில் ஆத்திரமும், ஏமாற்றமும் காணப்பட்டது. ஆனால் மோடி அரசு ஒன்றும், மௌனபாபா மன்மோகன் சிங் தலைமையிலான அரசு கிடையாது.

அந்தத் தாக்குதல் நடந்து 13 நாள்களுக்க பிறகு, பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து விமானபடை தாக்குதல் நடத்தியது. அந்தநேரத்தில், ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் இருந்தது. பாகிஸ்தான் துயரத்தில் இருந்தது. அதேவேளையில் ராகுல் காந்தியும், அவரது நிறுவனமும் கவலைப்பட்டன. ராகுல்காந்தியின் குருவான சாம் பிட்ரோடா, சிறுபிள்ளைகள் தவறிழைத்து விட்டனர், ஆதலால் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றார்.

40 வீரர்களை கொன்றவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமா?
எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தினால், பதிலுக்கு பீரங்கிமூலம் குண்டுகளை வீசுவது என்ற கொள்கையில் தெளிவாக இருக்கிறோம். பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது. பயங்கரவாதிகளுக்கு எதிராக பாஜக சிறிதும் சகிப்புத்தன்மை காட்டாது. 50 ஆண்டுகளாக நாட்டை காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது. அப்போது ஏழைகள், பழங்குடியினர், கிராமங்கள், நகரங்களுக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. ஆனால் 5 ஆண்டுகால ஆட்சியில் 50 கோடி ஏழைகளின் வளர்ச்சிக்கான பணியை மோடி அரசு செய்துள்ளது.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

100 நாளுக்கான செயல் திட்டத்தின் ம ...

100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை ஜூன் 04 முதல் ஜூன் 14 வரை அமெரிக்க ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகள ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகளை மோடி பகிர்ந்துள்ளார் பாதஹஸ்தாசனம் அல்லது கைகளால் கால்களைத் தொடும் யோகா நிலை ...

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள் என்றும்; அழிவுகரமானதாக அல்ல என்றும் ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்ப ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்பது குறித்து மோடி மகிழ்ச்சி 2001-ம் ஆண்டு ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை எ ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை என்ற தலைப்பில் நாளை நடக்கும் மாநாடு 2023 டிசம்பர் 25ந்தேதி. "பாரதிய நியாய சன்ஹிதா 2023", ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...