துரியோதனன் யார்? அர்ஜுனன் யார்? என்பது மே 23 ஆம்தேதி தெரிந்துவிடும் என பாஜக தலைவர் அமித் ஷா பிரியங்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஹரியாணா மாநிலம், அம்பாலா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குமாரி செல்ஜாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல்பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா பேசுகையில்,
தலைக்கனம், ஆணவம் ஆகியவற்றை நமது நாட்டுமக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். வரலாறும், மகாபாரதமும் இதற்குசாட்சி. துரியோதனனும் மிகுந்த ஆணவத்துடன் இருந்தார்.
அவரைத் திருந்தச் செய்ய பகவான் கிருஷ்ணர் முயற்சி செய்தார். ஆனால் கிருஷ்ணரையே துரியோதனன் சிறைப்பிடித்தார்.
பிரதமர் மோடிக்கு துணிச்சல் இருந்தால், மக்களவைத் தேர்தலை வளர்ச்சி, வேலை வாய்ப்பு, விவசாயிகள், பெண்கள் விவகாரங்களை முன்வைத்துப் போட்டியிட வேண்டும்.
என்றார் பிரியங்கா.
இந்நிலையில், பிரியங்காவின் பேச்சுக்கு மேற்குவங்க மாநிலம் திஷ்னுபூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரத்தில் தலைவர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
அப்போது, இது ஜனநாயகம். நீங்கள் சொல்லி விட்டதாலேயே யாரும் துரியோதனன் ஆகிவிட முடியாது. துரியோதனன் யார்?, அர்ஜுனன் யார்? என்பது மே 23 ஆம் தேதி நமக்கு தெரிந்து விடும் என பதிலளித்துள்ள அமித்ஷா, ராஜீவ் காந்தி ஆட்சியில் நடைபெற்ற போபர்ஸ் வழக்கு பற்றி பிரதமர் மோடி பேசினார். அவர்கூறியதில் என்ன தவறு இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.