மக்களை முட்டாள்களாக்க முடியாது கங்கனா ரனாவத் பதிலடி

சம்பல் பிரச்னையை வைத்து மக்களை முட்டாள்களாக்க முடியாது என்று காங்கிரசுக்கு பா.ஜ., எம்.பி., கங்கனா ரணாவத் பதிலடி கொடுத்துள்ளார்.

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யான பிரியங்கா, பார்லிமென்ட்டில் முதல்முறையாக நேற்று தனது கன்னி உரையை ஆற்றினார். அவரது பேச்சை காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டி வந்த நிலையில், பா.ஜ., எம்.பி., கங்கனா ரணாவத் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: பிரச்னைகளை விட்டு விட்டு, கதைகளை பின்னி பேசியுள்ளார். யார் வேண்டுமானாலும் உட்கார்ந்து கொண்டு, குற்றச்சாட்டுக்களை கூறலாம். பார்லிமென்டில் ராகுல் மற்றும் பிரியங்காவின் பேச்சு ஒரே மாதிரியாகத் தான் இருந்தது. அதற்கு முன் அவர்களின் தாயார் இதுபோன்று பேசுவார். தங்களின் தாயை விட சிறப்பாக பேசியிருக்கிறோம் என்று அவர்கள் வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம்.

சம்பல் பிரச்னையை வைத்து மக்களை முட்டாள்களாக்க முடியாது. பிரச்னைகளை பற்றி பேச வேண்டும். உண்மையில், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சொந்த போராட்டங்களும், சவால்களும் இருக்கும். பிரியங்காவுக்கு பேசுவதற்கு ஏதுமில்லை. இதன் காரணமாகவே, நாட்டில் அச்சப்படும் சூழல் இருப்பதாகக் கூறி, மக்களை தூண்டுவிடுகிறார். அவரது கொள்கையில் பலவீனமானவர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அல்லது பா.ஜ., தலைவர்களுடன் விவாதம் நடத்த முடியாதவர், எனக் கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...