ஜெய்சங்கர் மத்திய அமைச்சர்… அண்டை நாடுகள் வெலவெல

வெளியுறவுத் துறை செயலராக பதவிவகித்த காலத்தில் இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கியதில் கடும்கண்டிப்பை காட்டிய ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சராகி இருக்கிறார்.

நேற்றையை பதவியேற்பு விழாவில் உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்தது ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்ட அமைச்சர்பதவிதான். காரணம் ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக இவர் உலகின் அனைத்து நாடுகளிலும் அறியப்பட்டவர். 1955-ம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் தந்தை சுப்பிரமணியம் இந்தியக்குடிமைப் பணி அதிகாரியாகப் பணியாற்றியவர். ஜெய்சங்கரின் மனைவி பெயர் கியாகோ ஜெய்சங்கர். இவர்களுக்குத் துருவா ஜெய்சங்கர், அர்ஜுன் ஜெய்சங்கர், மேத்தா ஜெய்சங்கர் என 3 குழந்தைகள். ஜெய்சங்கரின் கல்விக் காலம் முழுவதும் டெல்லியில்தான். ஸ்டீபன் கல்லூரியில் பட்டம்பெற்ற இவர் பொலிட்டிகல் சயின்ஸ் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். டெல்லி ஜே.என்.யு-வில் பிஹெச்.டி பெற்ற இவர் 1977-ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் அதிகாரியாகத் தேர்வாகி பணியாற்றத் தொடங்கினார்.

இந்திய வெளியுறவுத்துறையில் தொடக்க காலத்தில் ஜி. பார்த்தசாரதியின் சிஷ்யராக இருந்தவர் ஜெய் சங்கர். 1980களில் தாரப்பூர் அணு மின் நிலையங்களுக்கான எரிபொருள் தொடர்பான அமெரிக்கா விவகாரங்களை திறம்பட கையாண்டவர்.

அதேபோல் 1988-90ம் ஆண்டு காலத்தில் இலங்கைக்கான இந்திய தூதரகத்தில் முதன்மைசெயலராக பணிபுரிந்தார் ஜெய்சங்கர். அப்போதுதான் இந்திய அமைதிப்படை இலங்கையில் புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த காலம். இவர்தான் அமைதிப் படையின் அரசியல் ஆலோசகராகவும் இருந்தார்.

குஜராத் முதல்வராக மோடி பதவிவகித்த போது  அவருக்கு விசாவை அமெரிக்கா வழங்கமறுத்தது. 2014-ல் மோடி பிரதமரான போது அமெரிக்காவுடன் போராடி மோடிக்கு விசாவை பெற்றுக்கொடுத்தவர் ஜெய்சங்கர். அப்போது முதலே மோடியின் இதயத்தில் இடம்பிடித்து விட்டார் ஜெய்சங்கர்.

2004-2007-ம் ஆண்டில் வெளியுறவு துறையில் அமெரிக்கா விவகாரங்களை கவனித்துவந்தார் ஜெய்சங்கர். அவரது காலத்தில்தான் இந்தியா- அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. 2013-ம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறை செயலர் பதவிக்கு ஜெய்சங்கர் பெயர் அடிபட்டது. ஆனால் சீனா, சிங்கப்பூர் நாடுகளுக்கான தூதரானார் ஜெய்சங்கர்.

 

சீனாவுக்கான இந்திய தூதராக பணியாற்றிய காலத்தில் இரு நாடுகளின் உறவு மேம்படுவதற்கு முயற் சிகளை மேற்கொணார் ஜெய்சங்கர். குறிப்பாக 2013-ம் ஆண்டு லடாக்கில் சீனா ஊடுருவலை மேற் கொண்டது. அதேகாலத்தில் சீனா அதிபர் இந்தியாவுக்கு வருகைதர இருந்தார். லடாக்கில் இருந்து சீனா படைகள் வெளியேறினால்தான் சீனா அதிபர் இந்தியாவுக்கு வரமுடியும் என மிரட்டல் விடுத்து பணியவைத்தார் ஜெய்சங்கர்.

2015-ம் ஆண்டு மோடி ஆட்சிக்காலத்தில் வெளியுறவுத் துறை செயலராக அவருக்கு பதவி உயர்வுகிடைத்தது. சீனாவுக்கு இடம் கொடுத்திருந்த நேபாளம், பெருவெள்ளத்தில் சிக்கியபோது ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியாவின் பக்கம் திருப்பியதில் ஜெய்சங்கரின் பணி முக்கியமானது.

தற்போது மோடி அரசில் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சராகவே நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை சுமார் 40 ஆண்டு காலமாக கையாண்ட அனுபவமிக்கவர் என்பதால் நமக்கு இணங்கிவராத நம்மை சார்ந்திருக்கும் அண்டை நாடுகள் அச்சம்கொள்ளவே செய்யும் என்பது அரசியல் பார்வையாலர்கள் கருத்து.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...