இந்நிலையில் இதுகுறித்துக் கருத்துத்தெரிவித்துள்ள ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் ஜி.குரு மூர்த்தி, ”5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக 2 தொகுதிகளில் தோற்றது. 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குவித்தியாசத்தில் 5 தொகுதிகள். 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் 5 இடங்களில் தோல்வி அடைந்தது.
அதே வேளையில் பாஜக 2 லட்சத்தை விடக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 2 இடங்களில் தோற்றது. 3 லட்சத்துக்கும் குறைவான வித்தியாசத்தில் ஓரிடம், 3 லட்ச வாக்குகளுக்கும் அதிகமாக ஓரிடத்தில் தோல்வி.
ஒருவேளை தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பலைஇருந்தால், பாஜக வேட்பாளர்கள் 4 முதல் 5 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் அல்லவா தோற்றிருக்கவேண்டும்? எனில் இது யாருக்கான எதிர்ப்பலை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.