பல மொழிகளை கற்றால் தமுழில் ஞானம் வளரும்

ஆரம்பத்தில் எனக்குத்தெரிந்த மொழி தமிழ் மட்டும் தான். பிறகு ஆங்கிலம், பள்ளிக்கூடம் மூலம் கற்றேன். தமிழ் வழி பாடத்திட்டத்தில் பயின்றமையால், ஆங்கிலத்தில் ஞானம் ஏதும் வளரவில்லை.

என் அம்மாவிற்கு, நான் ஆங்கிலம் நன்கு பயில வேண்டும், ஆங்கிலத்தில் சரளமாக பேசவேண்டும் என்ற அவா.

ஆகவே, The Hindu Newspaper ஐ படிக்க வைப்பார்கள். அதுவும் அதன் Editorial page ஐ. எனக்கு படிக்கவே வராது. தத்து பித்துன்னு படிப்பேன்.

என் அம்மா 3 வது கூட படித்தவர் இல்லை. ஆனால், உலக ஞானம் அதிகம்.கதைகள்,  ப்ரவசனம் கேட்டும், தனது அக்காள் மகன் சமஸ்க்ருதம் பயிலும்போது கற்கும் இலக்கண விதிகள் அறிந்தும், ச்லோகங்கள் சந்தி பிரித்து, அர்த்தம் அறிந்து மனனம் செய்து பழக்கப்பட்டமையால், ஓரளவு சமஸ்கிருத ஞானம் அடைந்திருந்தார்கள்; மேலும் அபார நினைவாற்றலையும் பெற்றிருந்தார்கள்.

ஆகவே,ஆங்கிலம் என் அம்மாக்கு ஒரு பொருட்டே அல்ல. நான் தவறு செய்தால், டாண் என்று அங்கு correction நடக்கும். Spelling, syllable பிரித்து பழக்குவார்கள்.

இப்படியே, எனது பள்ளிப்படிப்புக்கு மீறி எனக்கு, சமஸ்க்ருதம் மற்றும் ஆங்கிலம் நன்கு வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் முடிந்த்து.

என் அம்மாவிடம் எனக்கு முற்றிலும் பிடிக்காத, மாறுபட்ட கருத்து இருந்தது: அதாவது தமிழில் அழுத்த சப்தங்கள் இல்லை; எல்லாவற்றிற்கும் ஒரே க , ச, ட த என்ற ப்ரயோகம் என்பார்கள்.

எனது 7 வயதிலேயே, எனக்குத்தோன்றும்: தமிழில் வலிமையான சப்த்த்திற்கும், மென்மையான சப்த்த்திற்கும் வேறு வழி வகை உள்ளது. ஆனால் அப்பொழுது தமிழ் இலக்கணம் தெரியாது. ஆகவே, உரை நடையிலும், செய்யுளிலும் மேல் கோள் காட்டி வாதம் செய்வேன்.

வாதம் செய்யும் பொழுது சிறிது சிறிதாக, 5-6 வருடங்களில் எனக்கு ஒரு பேருண்மை புலப்பட்டது: அதாவது, சமஸ்க்ருதம், செம்மை படுத்தப் பட்டு ள்ளது. தமிழ் இன்னும் பழமையை த்தழுவியே உள்ளது என்று.

பிறகு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகள் கற்றேன்.

ஒரு விஷயம் தெளிவாகியது: தமிழையும் சமஸ்க்ருத்த்தையும் பிரிக்கவே முடியாது. இரு மொழிகளும் பிற்பால் பாரத்தத்தில் நடந்த அந்நிய ஆக்ரமிப்பாலும், பல் வேறு மொழிகளாயுள்ளன.

இரு மொழிகளுமே, முதலில், எழுத்து வடிவத்தில் இருக்கவில்லை. எழுத்து வடிவம் என்பது ஒரு ஆடை போல் தான். ஒரு பெண், சல்வார்கமீஸும் போடலாம், புடவையும் கட்டலாம். Pant top உம் போடலாம். அவள். அவள் தான்.

தமிழும் சமஸ்க்ருதமும், பாரத்த்தில், ஒரே சமயத்தில் வளர்ந்துள்ளன. தமிழில், இடுகுறிப்பெயர்கள் அதிகம் மற்றும் அவை மொழிக்கு ஆதாரம். சமஸ்க்ருத்த்தில், காரணப்பெயர் தான் அதிகம். அதை வைத்தே, root , வேர் ஏற்பட்டுள்ளது. மொகலாயர் காலத்தில் தான் சமஸ்க்ருதம் கடின் போலி ஆகி, பிறகு Hindi ஆயிற்று. இன்றும், ஹிந்தியில், சமஸ்க்ருத்த்தின் தாக்கம் அதிகம் இருக்கும்.

ஹிந்தி சினிமா ஏற்றுக்கொண்டு உபயோகிப்பதோ உருது based ஹிந்துஸ்தானி. Sanskritized Hindi பேசினால், வட நாட்டில் யாருக்கும் புரியாது. பல மொழிகளை கற்றால் தமுழில் ஞானம் வளரும் என்பதே என் அனுபவம் கூறும் உண்மை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...