"லட்சகணக்கான அரசு ஊழியர்களை யும் லோக்பாலின் வரம்பிற்குள் கொண்டுவருவது ரொம்ப கஷ்ட்டம்பா சொன்னது யாரும் இல்லை நம்ம மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தான் .
அரசுதுறையில் பணியாற்றும் "ஏ' பிரிவு அதிகாரிகளைதவிர, "பி' "சி' பிரிவில் பணியாற்றும் ஊழியர்களையும் லோக்பால்_வரம்பிற்குள்
கொண்டுவருவது மிக கடினம . 57 லட்ச அரசு அதிகாரிகளை, ஐந்து அல்லது 10 (அ) 15 பேர் கொண்ட_குழு, எப்படி கண்காணிக்க இயலும் என்று அறிவுப்பூர்வமான கேள்வியை எழுப்பியுள்ளார் .
இந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்களுக்கு வேலையே இல்லை, இவர்கள் ஊழலை ஒழிப்பதற்கு எந்த முயற்சியையும் செய்வதில்லை, அதே நேரத்தில் யாரேனும் நல்ல திட்டத்தை பரிந்துரைத்தால் அதில் குற்றம் கூறி செய்திதாளில் இடம் பிடித்து விடுவது, தூங்குகிறவர்களை எழுப்பிவிடலாம் துன்குவதை போன்று நடிக்கிற இவர்களை எப்பிடி எழுப்ப முடியும், இவர்களை நாம் எப்படி செயல்படவைக்க போகிறோம். இவர்களிடம் தேச பாதுகாப்புக்கோ , தேச நலனுக்கோ , தேச ஒருமைப் பாட்டுக்கோ உத்திரவாதம் இல்லை.
120 கோடி இந்திய மக்களை ஒரு பிரதமர், ஒரு ஜனாதிபதி, 68 மத்திய மந்திரிகள் , 15 லட்சம் காவல் துறை போன்றவை கண்காணிக்கும் போது , ஏன் 57 லட்சம் அரசு ஊழியர்களை 15 பேர் கொண்ட குழு கண்காணிக்க முடியாதா என்ன ?
சரி இவர் வழியிலேயே சிந்திப்போம் 57 லட்சம் பேரையும் 15 பேர் கணிகானிக்க முடியாதுதான்…ஆனால் 10000 அரசு ஊழியர்களை கண்காணிக்க ஒரு ஆள் எனும் வீதத்தில் பார்த்தல் கூட 570 பேர்தான் தேவை..
இந்த 570 பேரை அந்த 15 நபர்களால் கண்காணிக்க_முடியாதா என்ன ? 570 வது பேருக்கு மாதம் 30000 சம்பளம் என்று பார்த்தல் ஒரு வருட செலவு வெறும் 18 கோடிதான் (கலை ஞர் இலவச டி.வி க்கு செய்த செலவு 3ooo கோடிக்கும் மேல் )…ஆனால் மக்களுக்கு கிடைக்ககும் நன்மையோ பல்லாயிரம் பல்லாயிரம் கோடியாகும் , மேலும் 57 லட்சம் அரசு ஊழியர்களையும் எப்போதும் கண்காணிக்க வேண்டியதில்லை . புகார்கள் வரும் பொதுதான் அதை லோக்பால் விசாரிக்கும். இவங்க காங்கிரஸ் அமைச்சரவை போன்று – 57 லட்ச அரசு ஊழியர்களும் ஊழல் செய்கிறார்கள் என் நினைக்கிறாரா ?
பெருக்கெடுத்து வரும் சுனாமியை நம்மால் தடுக்கமுடியாது அதே நேரத்தில் கடற் கரையில் காடுகளை வளர்ப்பதன் மூலம் அதன் வேகத்தையும், சேதத்தையும் பெரிய அளவில் குறைக்கலாம் , அதை போன்றுதான் லோக்பாலும் ஊழலை முற்றிலும் ஒழித்துவிடும் என்று நினைப்பதை விட பெரிய அளவில் கட்டு படுத்தும் என்பதே உண்மை, ஆனால் இவர்கள் எதாவது ஒரு காரணத்தை கண்டுபிடித்து லோக்பாலை பயனில்லாமல் செய்து விட வேண்டும் என கங்கணம் கட்டிகொண்டு செயல்படுவது போன்றே தெரிகிறது. எனவேதான் அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் காட்டும் ஆர்வத்தை இந்திய மக்கள் பெருவாரியாக எதிர்பார்க்கும் லோக்பாளில் காட்ட மறுக்கிறார்கள்
தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.