10% இட ஒதுக்கீடு எந்த பங்கமும் வராது

பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டினால் சமூக நீதிக்குபங்கம் என்பது விஷமப் பிரசாரம். உயர் சாதியில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள், குறைந்த மதிப்பெண் எடுத்தால் போதும், வேலைக்கு தகுதியாகி  விடுவார்கள் எஸ்.சி, எஸ்.டி யை விட குறைவான மதிப்பெண் பெற்றாலே  அவரக்ளுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற ஒருதவறான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

சமீபத்தில் சட்டமாக்கப்பட்ட 10 % இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பாரத ஸ்டேட்வங்கி நடத்திய பணிக்கான தேர்வில்  எஸ்.சி பிரிவினருக்கு குறைந்த பட்சமாக நிர்ணயம் செய்யப்பட்ட மதிப்பெண்கள் (Cut-off) 61.25 , எஸ் டி பிரிவினருக்கு 53.75,மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 61.25 ஆகவும், பொதுபிரிவினருக்கு 61.25 ஆகவும், பொதுபிரிவில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு (உயர் சாதி அல்ல) 28.5 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

என்ன,ஏதுவென்ற தெரியாத அரைவேக்காட்டு சமூக ஆர்வலர்களும் இதுகுறித்து கடுமையாக விமர்சனம் செய்வது முட்டாள்தனமானது. தற்போதைய  சட்டப்படி, மொத்தம் உள்ளதில் 10 விழுக்காடு பொதுபிரிவில் பொருளாதார ரீதியாக நலிந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும். அதனடிப்படையில், தற்போது 421 இடங்களுக்கு 42 இடங்களை இந்த ஒதுக்கீட்டில் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டின் படி  69 விழுக்காடு அந்தந்த பிரிவினருக்கு முறையே  கொடுக்கப்படவேண்டும்.

 

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பொருளாதார இட ஒதுக்கீட்டில் அதிகளவு நபர்கள் விண்ணப்பிக் காததையடுத்து, குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது போட்டி, குறைந்தளவு இருந்தால் குறைவாகவும், அதிகளவு இருந்தால் அதிகமாகவும் இருக்கும் என்பது நியதி. சமீபத்தில்தான் இந்த ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருப்பதால் தங்களின் சாதி சான்றிதழில் பொருளாதார ரீதியாக நலிந்தபிரிவினர் என்பதை ஆவணப்படுத் முடியாமல் போனது மற்றும் 8 லட்ச ரூபாய்க்கும் குறைவான வருமானம் (Creamy Layer) என்பதற்கான ஆதாரங்களை பதிவுசெய்வதற்கான நேரமின்மை ஆகிய காரணங்களால் அதிகளவில் விண்ணப்பங்கள் வந்திருக்காது என்பதே கண்கூடு. அதாவது  42 இடங்களுக்கு வெறும் சிலநூறு பேர் மட்டும் விண்ணப்பம் செய்திருந்தால் குறைந்த பட்ச மதிப்பெண்களே ‘கட்-ஆஃப்’ ஆக இருக்கும். அதே இனிவரும் காலங்களில் பல ஆயிரக்கணக்கில் விண்ணப்பிக்கும்போது ‘கட்-ஆஃப்’ மதிப்பெண் உயரும்.

இந்த சாதாரண விவரம்கூட தெரியாமல்,  பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான இடஒதுக்கீட்டினால், சமூக நீதிக்குபங்கம் என்ற விஷம பிரச்சாரத்தை முன்வைக்க இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளனர் எதிர்க் கட்சியினர். தொடர்ந்து தவறான தகவல்களின், போலி தரவுகளின் அடிப்படையில், பாஜக அரசு குறித்த விமர்சனங்களை முன் வைத்து மக்களின் மனங்களில் வன்மத்தை வளர்க்க துடிப்பது  வன்மையாக கண்டிக்கத்தக்கது. உண்மையை மக்களிடத்தில் எடுத்துசொல்லி சந்தற்பவாதிகளின்  பொய் பிரச்சாரத்தை முறியடிப்போம்.

தமிழக பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...