அயோத்தியில் ராமருக்கு 251 மீட்டர் உயரத்தில் சிலை

அயோத்தியில் ராமருக்கு 251 மீட்டர் உயரத்தில் சிலைவைக்கப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இதுதொடர்பாக அம்மாநில தலைநகரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில அரசின் உயர்மட்டக்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் கூறியதாவது:

அயோத்தியில் சரயு நதிக் கரையின் அருகில் 100 ஹெக்டேர் நிலப்பரப்பில் 251 மீட்டர் உயரத்தில் ராமர்சிலை அமைக்கப்படும். குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலையைவிட இதுவே உலகின் உயரமான சிலையாக அமைய உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. அதனுடன் அயோத்தியின் கட்டமைப்புமேம்பாடு தொடர்பான திட்டங்களும் தொடங்கப்பட உள்ளன.

மேலும் இங்கு நூலகம், வாகன நிறுத்துமிடம், வணிகக்கூடங்கள் உடன் கூடிய ராமர் தொடர்பான டிஜிட்டல் அருங்காட்சியகம் அமைக்கவும் முடிவெடுத்துள்ளோம். இதற்கான தொழில்நுட்ப உதவிகளுக்கு குஜராத் அரசுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப் படுகிறது.

சிலை அமைக்கும் இடம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கிய அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஐஐடி கான்பூர் மற்றும் நாக்பூரைச்சேர்ந்த தேசிய பசுமை பொறியியல் ஆய்வக அமைப்பின் உதவிகளை நாடியுள்ளோம் என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...