யுக யுகத்திற்க்கான பாரதம் என்ற அருங்காட்சியகம் இந்தியாவின் வளமான பாரம்பரியத்திற்கு சான்றாக அமையும்- கஜேந்திர சிங் ஷெகாவத் பேச்சு

சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டு திட்டத்தின் ஒருபகுதியாக தில்லி வடக்கு மற்றும் தெற்கு பிளாக்கில் கட்டப்படவுள்ள யுக யுகத்திற்கான பாரதம் என்ற  அருங்காட்சியம் தொடர்பாக அமைச்சகங்களுக்கு இடையேயான  ஆலோசனை மற்றும் திறன்கட்டமைப்பு பயிலரங்கத்தைக் கலாச்சாரஅமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பயிலரங்கம் 2024 ஜூன் 26 முதல் 29-ம் தேதி வரை 4 நாட்கள் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.

நிறைவுநாளான நேற்று  (29.06.2024) மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கஜேந்திர சிங் ஷெகாவத், இந்த அருங்காட்சியகம் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தற்குச் சான்றாக நிலைத்துநிற்கும் என்றார். இது அருங்காட்சியக அனுபவத்தைத்தாண்டி, அனைவரையும் உள்ளடக்கிய உணர்வைக் கொண்டிருக்கும் என்று அவர் கூறினார் . இதுமக்களின் அருங்காட்சியகமாக இருக்கும் என்றும், சமூகத்தை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

புதுதில்லியின் ரைசினா மலைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் மத்தியநிர்வாகப் பகுதியை மறுசீரமைக்க மேற்கொள்ளப்படும் சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் ஒருபகுதியாக இந்தியாவின் புதிய தேசிய அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகம் 1,54,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது. இது உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாகத் திகழும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...