பயன்பாட்டில் இல்லாத 58 பழைய சட்டங்களை நீக்குவதற்கு வகைசெய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் வெள்ளிக் கிழமை ஒப்புதல் அளித்தது.
மக்களவையில் கடந்த 29-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மீது மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது. மசோதாவுக்கு கட்சி வேறுபாடின்றி பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவுதெரிவித்தனர். விவாதத்தின் முடிவில் குரல் வாக்கெடுப்புடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, மாநிலங்களவையில் மசோதாமீதான விவாதத்தை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்து பேசுகையில், குறைந்தபட்ச சட்டங்களுடன் அதிகபட்ச நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக, பயன் பாட்டில் இல்லாத பழைய சட்டங்கள் நீக்கப்படுகின்றன மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபிறகு பயன்பாட்டில் இல்லாத பழைய சட்டங்களை நீக்குவதற்கு முடிவுசெய்தது. இதற்காக, பயன்பாட்டில் இல்லாத 1,824 சட்டங்களை நிபுணர் குழு கண்டறிந்தது.
அவற்றில், இதுவரை 1,428 சட்டங்கள் நீக்கப் பட்டுள்ளன. அதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சிதொடர்பான 75 சட்டங்களும் நீக்கப்பட்டுள்ளன.தற்போதைய மசோதா, 58 சட்டங்களை நீக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத சட்டங்களை நீக்குவது தொடர்ந்து கொண்டேஇருக்கும் என்றார் அவர்.
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |