தொண்டர்கள் தாயை போன்றவர்கள்

கட்சித் தொண்டர்கள் தாயைப்போன்றவர்கள்; தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் நினைக்கக் கூடாது. அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’

 தாய்தான் மகனை வளர்த்து பெரிய ஆளாக்குவார்கள். அதேபோல், கட்சியின்வளர்ச்சிக்கு தொண்டர்களின்பணி மிகவும் முக்கியமானதாகும். ஆதலால், கட்சித் தொண்டர்கள் மனதில் தாங்கள் புறக்கணிக்கப் படுகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், கட்சியையும், கட்சித் தொண்டர்களையும் மறந்து விடக்கூடாது. தேர்தலில் தங்களுக்காக உழைத்த கட்சித் தொண்டர்களுடன், தேர்தல்நேரத்தில் மட்டுமல்லாது, எப்போதும் எம்.பி.க்கள் தொடர்பில் இருக்கவேண்டும். பாஜக-வின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு கட்சித் தொண்டர்களும், அவர்களின் கடின உழைப்பும் தான் காரணம். பாஜகவானது ஒரு குடும்பம் போன்றது. கட்சியின் வளர்ச்சிக்கு சித்தாந்தமும், கொள்கைகளும்தான் காரணம். ஒரு குடும்ப பாரம்பரியத்தால் கட்சி வளர்ச்சியடையவில்லை.

எம்.பி.க்களுக்கு எத்தனைவயது ஆனாலும் சரி, அவர்கள் தங்களை புதியவற்றை கற்கும் மாணவர்களாகவே கருதி செயல்படவேண்டும். தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்றல் என்பது தொடர்ச்சியான செயல்பாடாகும். இது மிகவும் அவசியம்.

 

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கு 2 நாள் பயிற்சி நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இதில் நாடாளுமன்ற இரு அவைகளைச் சேர்ந்த 380-க்கும் மேற்பட்ட பாஜக எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை சனிக்கிழமை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியது:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...