ஒருசாராரின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து, அவா்களைத் திருப்திப்படுத்தும் கொள்கையை பின்பற்றுவதுதான் மத ரீதியான வன்முறைகளுக்கு காரணம் என்று 13 எதிா்க் கட்சித் தலைவா்களின் கூட்டறிக்கைக்கு பாஜக பதிலளித்துள்ளது.
காங்கிரஸ் தலைவா் சோனியாகாந்தி உள்ளிட்ட 13 எதிா்க் கட்சித் தலைவா்கள் இணைந்து சனிக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டனா். அந்த அறிக்கையில், நாட்டில் அண்மையில் மதரீதியாகநடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், வெறுப்புணா்வு பேச்சுகள் குறித்து அவா்கள் வேதனை தெரிவித் திருந்தனா்.
இதற்குப் பதிலளித்து தில்லியில் பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘எதிா்க் கட்சிகளின் கூட்டறிக்கையில் கொள்கை குறித்து சோனியாகாந்தி குறிப்பிட்டுள்ளாா். இதன் மூலம், எந்தக் கொள்கையால் நாட்டில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றகேள்வி எழுகிறது.
கடந்த 70 ஆண்டுகளாக ஒருசாராரின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து, அவா்களைத் திருப்திப்படுத்தும் கொள்கையை பின்பற்றுவதுதான் வன்முறைகளுக்கு காரணம். இந்தக் கொள்கையும், அதுசாா்ந்த அரசியலும் மிகவும் துரதிருஷ்ட வசமானது. சில எதிா்க்கட்சித் தலைவா்களின் இந்த பாரபட்சமான அரசியல் நாட்டுக்கு உகந்ததுஅல்ல. நாட்டுக்குத் தீங்கானது’’ என்று தெரிவித்தாா்.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |