மதம் சார்ந்த, வாக்குவங்கி சார்ந்த அரசியலை பாஜக விரும்பிய தில்லை. காஷ்மீர் என்றால் அங்கு முஸ்லிம்கள் மட்டும் வாழ்வதாககூறி வருகின்றனர். ஆனால் ஹிந்து, முஸ்லிம், சீக்கியர்கள், ஜெயின் மற்றும் பௌத்தர்கள் என அனைவரும் அங்கு வசித்து வருகிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே இதனால் பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அது ஒட்டுமொத்த மக்களுக்குமானதுதான். எனவே இதனால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படுவார்கள் என்ற பிம்பங்களை கட்டமைக்க வேண்டாம்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் கூட அங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனைகள் எங்கே? மருத்துவர்கள் எங்கே? அங்கு சென்று ஒருமருத்துவரால் ஆவது பணி செய்ய முடியுமா? அங்கு சென்றால் அவரால் தனக்கென நிலமோ, வீடோ வாங்க முடியுமா? அவர்களது வாரிசுகளின் எதிர்காலம்? வாக்களிக்க முடியுமா? இதற்கான பதில்களை இந்த சிறப்பு அந்தஸ்தை ஆதரிப்பவர்கள் கூறவேண்டும்.
காஷ்மீரில் உள்ளவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்துவருவதாக குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். ஒருவேளை அம்மாநிலத்தைச் சேர்ந்தபெண், இதர மாநிலத்தைச் சேர்ந்தவரை மணந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு காஷ்மீரில் உள்ள அவர்களது சொத்துக்களில் உரிமை உண்டா? இனி இந்தியாவுடன் இணையும் சுதந்திரம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிடைத்துள்ளது.
இதனால் அங்கு வன்முறை ஏற்படும் என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன. அப்படியென்றால் அங்குள்ளவர்களுக்கு நீங்கள்சொல்லும் செய்தி வன்முறையில் ஈடுபட வேண்டும் என்பது தானா? 18-ஆம் நூற்றாண்டைப் போன்று அவர்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களா? 21-ஆம் நூற்றாண்டின் வாழ்க்கைக்கு அவர்களை மாற்ற விருப்பமில்லையா?
காஷ்மீர் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் அனைத்து தலைவர்களும் தங்களின் வாரிசுகளை பத்திரமாக அமெரிக்கா, இங்கிலாந்து என வெளிநாடுகளில் பாதுகாத்துவருகிறீர்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகள் தற்காலிகமானதுதான். இதனை பலர் ஒப்புக்கொண்டுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது 70 ஆண்டுகளாக இது நீடிக்கவேண்டிய அவசியம் என்ன? மேலும் எத்தனை காலம் இந்த தற்காலிக விவகாரத்தை நீட்டிக்க விரும்புகிறீர்கள்? முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூட இது தற்காலிகமானது தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் அமைதி, இயல்பு நிலை திரும்பிய உடன், மீண்டும் யூனியன் பிரதேசத்தில் இருந்து மாநிலமாக மாற்றியமைக்கப்படும். இதற்கு அதிக காலம் ஆகலாம். ஆனாலும் நிச்சயம் ஒருநாள் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான மசோதாவை தாக்கல் செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது:
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |