கார் கேட்டு… திருமணமான ஒரு மணி நேரத்தில் முத்தலாக்

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நதீம் என்ற பப்பன் (27). இவர் ஷூஷோரூம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஆக்ரா பகுதியை சேர்ந்த ரூபி (26) என்ற பெண்ணிற்கும் ஆகஸ்ட் 15 அன்று இரவு திருமணம் நடைபெற்றது. ரூபி, பல்மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றிவருகிறார். 7 பேருடன் பிறந்த ரூபி, வீட்டில் 3 வது பிள்ளை.
திருமணத்தின் போது ரூபியின் வீட்டாரிடம் வரதட்சணையாக கார்வேண்டும் என நதீம் கேட்டுள்ளார். கார் தராததால் திருமணம் முடிந்த ஒருமணி நேரத்தில் மவுலவி முன்னிலையில் மூன்று முறை “தலாக்” கூறி மனைவியை  விவாகரத்துசெய்துள்ளார். தங்களின் பெண்ணை ஏற்றுக் கொள்ளும்படி ரூபியின் வீட்டார் கெஞ்சியும் அவர் மனம் இரங்கவில்லை.
இதனையடுத்து ரூபியின் வீட்டினர் நதீமின் குடும்பத்தினரிடம்  பேச்சு வார்த்தைக்கு சென்றபோது, அவர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதனால் ரூபியின் வீட்டார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து நதீம் மற்றும் அவரது உறவினர்கள் 8 பேர்மீது போலீசார் வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். இருந்தும் இதுவரை யாரும் கைது செய்யப்பட வில்லை. முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு சட்டமாக நிறைவேற்றிய சிலநாட்களிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...