ஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்

ஆகஸ்ட் 20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யபடும் என மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில்  குமார சாமி தலைமையில் இருந்த காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை  தொடர்ந்து பாஜக  ஆட்சி அமைந்தது. கடந்த ஜூலைமாதம் 26ம் தேதி மாநில  முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அதைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம்  நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இதுவரை அதற்கு நேரம்  வாய்க்கவில்லை. வட கர்நாடகாவில் பலத்தமழை, காஷ்மீர் மாநிலம் பிரிப்பு, எம்எல்ஏ பதவி இழந்த 17 பேர்களின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது ஆகியவற்றால் அமைச்சரவை விரிவாக்கம் தாமதமானது.

இந்நிலையில்,இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, நாளை மறுநாள் 20-ம் தேதி கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், பாஜக  சட்டமன்ற கட்சிகூட்டம் அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பின்பே நடைபெறும் என்றும் எடியூரப்பா தகவல்தெரிவித்தார். கர்நாடகா அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய கட்சிமேலிட அனுமதி பெற்றதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே,  கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, எனது தலைமையில் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது அதிருப்தி எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரின்  தொலை பேசிகளை ஒட்டுக்கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்தவிவகாரத்தில் என்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆட்சியை இழந்தபிறகு, இந்த விவகாரத்தில் என்மீது புகார் கூறுவது ஏன்? பாஜக ஆட்சி நடைபெறுவதால் இந்த விவகாரம்  குறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும். தகுதிநீக்கம் செய்யப்பட்ட மஜத முன்னாள் எம்எல்ஏ எச்.விஸ்வநாத் என் மீது இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளதாகத்தெரிகிறது.

அதுகுறித்து எந்தக்கருத்தும் தெரிவிக்க நான் விரும்பவில்லை. கடந்தாண்டில் ஒருசிலர் என்னிடம் எப்படி நடந்து கொண்டுள்ளனர் என்பதனை நான் அறிவேன். ஆனால், யாரைப்பற்றியும் இப்போது நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை.  தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியேதெரியவரும் என்றார்.  இதற்கு இன்று பதிலளித்த மாநில முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் உள்பட பலர் தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக புகார் கொடுத்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்களின் தொலைபேசி ஓட்டுகேட்கப்பட்டது  தொடர்பானபுகாரை சிபிஐ விசாரிக்கும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...