திமுகவை இந்துக்களிடம் இருந்து பிரிக்க சதியாம்

திமுகவை இந்துக்களிடம் இருந்து பிரிக்க சதி நடக்கிறது – என்று உதயநிதி ஸ்டாலின் அலறுகிறார். திமுக எப்போது இந்துமக்கள் உணர்வுகளை புண்படுத்தாமல், இந்துக்களை மதித்து நடந்தது?

இந்து என்றால் திருடன்…!!”

“ராமன் ஒரு குடிகாரன்…!!!”

“ சிதம்பரம் நடராஜரையும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் பீரங்கிவைத்து தகர்கும் நாள் நல்ல நாள்.”

“ ராமர் எந்தபொறியியல் கல்லூரியில் படித்தார் ராமர் பாலம் கட்ட?”

இது எல்லாம் உங்கள் பாட்டன் மு. க. அவர்கள் பேசியது.

“மதுரை மீனாட்சிக்கு மாதவிடாய் வருமா?”

“ மதுரை மீனாட்சிக்கு வருடாவருடம் கல்யாணம் ஏன்? சென்றவருசம் கல்யாணம் செய்த கணவன் எங்கே போனார்.”

“தன்நகையை பாதுகாக்க துப்பு இல்லாத திருப்பதி சாமி”

இது எல்லாம் உங்கள் அத்தை கனிமொழி பேசியது.

“வைதீக திருமணம் எப்படி நடக்கும் என்பது உங்களுக்கும் தெரியும். மணமக்களை இப்படி வசதியாக நாற்காலி போட்டு, அதிலே உட்காரவைத்து திருமணம் நடக்காது. மணமக்களை தரையில் உட்கார வைத்து, அவர்கள் பக்கத்தில் ஐயர் அல்லது புரேரகிதர் அங்கே உட்கார்ந்து கொண்டு, அந்த திருமணத்தை எப்படி நடத்திவைப்பார் என்றால், அவருக்கும் மண மக்களுக்கும் இடையில் நெருப்பை மூட்டி, அந்த நெருப்பில் இருந்து வரும் புகை மூட்டம் அந்த மண மக்களின் கண்களை தாக்கி கண்ணீர் சிந்தவிடுவார்கள். அவர்கள் மட்டுமா? உங்கள் கண்களையும் விட்டு வைக்காது. நீங்களும் உங்கள் கண்களை கசக்கிக் கொண்டு அங்கே ஒரு சோக சூழ்நிலையில் அனைவரும் இருப்பார்கள்.

அதன்பின் புரேரகிதர் சில மந்திரங்களை எடுத்து சொல்வார். கின்னர்களை கூப்பிடுவார், கிம்புருவர்களை கூப்பிடுவார், தேவர்களை, முப்பத்துமுக்கோடி தேவர்களை கூப்பிடுவார். அதற்கு மேல் சில extra அவதாரங்களையும் கூப்பிடுவார்.

அவர் என்ன சொல்கிறார். மணமக்களுக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. அந்த புரேரகிதரை கூப்பிட்டு கேட்டால் அவருக்கும் தெரியாது. அவரும் சொல்வார், எனக்கும் தெரியாது.

ஆனால் அதன் உள் அர்த்தத்தை பார்த்தால், உடம்பெல்லாம் நடுநடுங்கும். அவ்வளவு கேவலமான முறையில் அந்த மந்திரங்கள் இருக்கும்”

ஒரு முஸ்லிம் திருமண விழாவில், தி. மு. க. தலைவரும் உங்கள் தந்தையுமான திரு ஸ்டாலின் அவர்கள் பேசியது.

அவர் குறிப்பிடும் மந்திரத்தில் வரும் பதி என்ற சொல்லுக்கு தப்பர்தம் கூறும்விமர்சனம் செய்து இந்து மக்கள் மனதை புண்படுத்தி உள்ளார்.

ராஷ்டிர “பதி”(குடியரசு தலைவர்) என்பதற்கு குடியரசு “கணவன்” என்று பொருள் எழுதுவதுபோல், சிறு பிள்ளைத் தானமாக எழுதி உள்ளனர்.

பதி என்பதற்கு, தலைவன், பாதுகாவலன், ஆசான், கணவன் என்றும் இன்னு பலபொருள்கள் உண்டு. இடத்துக்கு தகுந்தபடி பொருள்கொள்ள வேண்டும்.

இந்து மக்களால் தெய்வமாக போற்றப்படும் அன்னை ஆண்டாளை வேசி என்று திமுக நட்புடைய வைரமுத்து பேசியதற்கு உங்கள் குடும்பத்தில் யாராவது கண்டனம் தெரிவித்ததுண்டா?

காலம்காலமாக இந்து மக்கள் கடைபிடித்து வரும் சித்திரை தமிழ் ஆண்டின் தொடக்கம் என்ற பண்டிகையை முடிவுசெய்து ஆணை போட்டது உங்கள் பாட்டன். jj ஆட்சியில் அந்த ஆணை ரத்து செய்யப் பட்டது. மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சித்திரை கொண்டாட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று கூறிவருவது உங்கள் தந்தை ஸ்டாலின் அவர்கள்.

முஸ்லிம் பண்டிகை, கிருத்துவ பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் நீங்கள் எந்த ஹிந்து பண்டிகைக்காவது வாழ்த்துக்கள் சொன்னதுண்டா?

முஸ்லிம் பண்டிகையில் கஞ்சி குடிக்க செல்லும் திமுக தலைமை, கிருத்துவ பாதிரியிடம் ஆசீர்வாதம் வாங்கும் திமுக தலைமை, இந்துக்கள் மத்தியில் ஆடிகூழ் குடிக்காதது ஏன்? ஸ்ரீரங்காத்தில் அய்யர் நெற்றியில் அணிந்த விபூதியை உடனேதுடைத்தது ஏன்?

அப்புறம் ஏன் இப்போது இந்து மக்களை உரிமை கொண்டாடுகிறீர்கள்.

உங்கள் அம்மாவை (tmt. துர்கா ஸ்டாலின்) கோவில் கோவிலாக அனுப்பினால் பாவமன்னிப்பு கிடைத்து விடாது? “ஊழில் பெருவலி யாவுள மற்றுஒன்று சூழினும் தான் முந்துறும் – திருக்குறள்.

முக நூல் பக்கங்களில் உங்கள் முகத்திரைகிழிய ஆரம்பித்துவிட்டது. 2021 தோல்விபயம் உங்கள் மனத்தில் பற்றிக்கொண்டது. அதனால் அந்தர் பல்டி அடித்து இந்துசொந்தம் பாராட்ட முற்பட்டு உள்ளீர்கள்.

இந்துமக்கள் சிந்திக்க வேண்டிய தருணமிது. ஓட்டை பறித்துவிட்டு வேதாளம் முருங்கை மரம் ஏறாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? தாலி அறுப்பு, பூணூல் அறுப்புசெய்யும் தி. க. தலைமை இன்னும் இவர்களுடன்தான். பெரியார் பாட்டுபாடும் இவ‌ர்க‌ள் கடவுளை நம்புகிறவன் முட்டாள். கடவுளை பரப்புகிறவன் காட்டு மிராண்டி என்பது எல்லாம் இந்துக்களுக்கு மட்டும் தான்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...