காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையிடம் பாகிஸ்தான் சமர்ப்பித்த கோரிக்கை மனுவில் காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையின் காரணமாக அங்கு உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதை, இந்தியாவின் முக்கிய எதிர்க் கட்சி தலைவரான ராகுல்காந்தி கூட உறுதிப்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும்புயலைக் கிளப்பியுள்ளது.
அதையடுத்து காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தினை பதிவு செய்திருந்தார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை விமர்சித்து காங்கிரசின் ராகுல்காந்தி பேசியது வெட்கக்கேடானது.
ராகுல் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கருத்து தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தேசமே கொந்தளித்து எழுந்ததன் விளைவு இது. அரசியல் கட்டாயங்களின் காரணமாகவே இது நிகழ்ந்துள்ளது.
அத்துடன் காஷ்மீருக்கு எதிர்க் கட்சி தலைவர்களை அழைத்துக் கொண்டு ராகுல்காந்தி சென்றது பொறுப்பற்ற செயல் .
நாட்டையே அவமானப்படுத்தி யுள்ளதன் காரணமாக காங்கிரசும் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |