பாஜக தேசியத்தலைவர் பதவிக்கு டிசம்பர் மாதம் தேர்தல்

பாஜக தேசியத்தலைவர் பதவிக்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என கட்சியின் தேசிய செயல்தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

பாஜக தேசிய செயல்தலைவர் ஜே.பி.நட்டா தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசியதாவது ,

“கட்சியின் தேசியத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேசியளவிலான இந்தத்தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும். அதேசமயம், வாக்குச்சாவடி வாரியாக அக்டோபர் 10 முதல் அக்டோபர் 30 வரை தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலப்பிரிவுக்கான தேர்தல்கள் நவம்பர் மாதம் நடைபெறுகிறது.

எங்கள் கட்சி உறுப்பினர்களைக் காட்டிலும், கூடுதல் மக்கள்தொகை கொண்ட நாடுகளின் எண்ணிக்கை வெறும் 8 மட்டுமே” என்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த 2014 முதல் பாஜகவின் தேசியத்தலைவராக உள்ளார். கட்சியின் விதிப்படி, ஒருதலைவர்  இரண்டு பொறுப்புகளை வகிக்கக்கூடாது. இதனால், மக்களவைத் தேர்தலுக்குப்பிறகு பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப் படுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. எனினும், தேசிய செயல்தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...