கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாடு ரஷியாவின் விளாதி வோஸ்டாக் நகரில் செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் 6-ம் தேதிவரையில் நடைபெறவுள்ளது.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அழைப்பின்பேரில் மோடி அந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார். ரஷியாவின் தூரக்கிழக்கு மண்டலத்துக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை.
இந்நிலையில், செப்டம்பர் 4-ம் தேதி காலை ரஷியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு மரியாதை வழங்கி வரவேற்றனர். பின்னர் அங்குகூடியிருந்த இந்தியர்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு உற்சாகவரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை, பிரதமர் நரேந்திரமோடி சந்தித்துப் பேசினார். இருவரும் இணைந்து ஸ்வெஸ்டா கப்பல் கட்டுமானத் தளத்தை பார்வையிட்டனர்.
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |