அமித்ஷா பேசியதை முழுவதுமாக செய்தித்தாளில் படித்து விட்டு இதை எழுதுகிறேன். செய்திகளுக்கு தலைப்பிடுவதில் தமிழக ஊடகங்கள் சில அல்லது பல எவ்வளவு அயோக்கியத்தனமான போக்கினை கொண்டிருக்கின்றன என்றும் அது கூட புரியாத முட்டாள்கள் எத்தனை பேர் இங்கே உலாவிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் புரிகிறது அவர் சொன்னது மிகவும் சரி. அதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நான் அதை ஆதரிக்கிறேன்.
அவர் கூறி இருப்பது, ஒவ்வொருவரும் தன் தாய்மொழிக்கு முதன்மை தர வேண்டும். எதற்கு எடுத்தாலும் ஆங்கிலத்தை தூக்கி கொண்டு திரிய வேண்டாம். இரு தமிழர்கள் சந்தித்தால் தமிழில் உரையாடுங்கள். இரு வங்காளிகள் வங்காளத்தில் உரையாடுங்கள்.தமிழரும் வங்காளரும் சந்திக்கும் போது?
ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று சொல்பவர்களைத் தான் சாடி இருக்கிறார். ஏனெனில் அந்த ஆங்கில மோகம் தமிழையும் அழிக்கிறது, வங்காளத்தையும் அழிக்கிறது. இணைப்பு மொழியாக ஏதாவது ஒன்று வேண்டும் எனும்போது ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்காமல் ஹிந்தியை தேர்ந்தெடுங்கள் என்கிறார். ( அது சரியா தவறா என்பது வேறு விவாதம். அதை பிறகு பார்ப்போம்) ஒரு அந்நிய மொழியான ஆங்கிலம் ஏன் நம்மை இணைக்க வேண்டும்? நம் தேசத்து மொழிகளில் ஒன்று நம் இணைப்பு மொழியாக இருக்கக்கூடாதா என்கிறார்.
ஆனால் இங்கே என்ன விவாதம் ஓடுகிறது? தமிழை அழிக்கப் பார்க்கிறார் அமித் ஷா என்று கதறிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு தான் இவர்கள் அறிவும் நேர்மையும்.
ஆங்கிலத்தை அழிக்கப்பார்க்கிறார் உள்துறை அமைச்சர் என்று சொல்லி விவாதம் செய்தால் அது சரியானது. வரவேற்கத்தக்கது. அந்த விவாதம் நடக்க வேண்டும். ஆனால் தமிழ் உட்பட எந்த பிராந்திய மொழி குறித்தும் அவர் எதிர்ப்பாக பேசவில்லை.
ஆனால் ஆங்கிலம் என் தகப்பன் மொழி, அது அழிய விட மாட்டோம் என்று இங்கே யாராலும் வெளிப்படையாக சொல்ல முடியாத காரணத்தால் சம்பந்தமே இல்லாமல் தமிழன்டா கோஷம் போடுகிறார்கள்.
மூளை உள்ளவன் தனியே சிந்தித்து பார்ப்பான். மூளை இல்லாதவன் கூட்டத்துடன் நின்று கோஷம் போடுவான் .
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |