முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது நமது நாட்டிலேயே குண்டு துளைக்காத கவச உடைகள் உற்பத்தி செய்யப் படுகின்றன. இதன் மூலம் நமது வீரர்களுக்கான தேவை நிறைவேற்றப்படுவதுடன், 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் நாம் ஏற்றுமதிசெய்து வருகிறோம்.
2014-ஆம் ஆண்டு வரை நமது வீரர்கள் குண்டு துளைக்காத கவசஉடைகள் இல்லாமல்தான் எல்லையைக் காத்துவந்தனர். அண்மையில், அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ராணுவத்தில் இணைக்கப்பட்டன. விரைவில் ரஃபேல் போர் விமானங்களும் படையில் இணையவுள்ளன. பாதுகாப்புத்துறை தொடர்பான பல முக்கிய முடிவுகளை, நமது அரசு மேற்கொண்டு, ராணுவத்தை வலுப்படுத்தியுள்ளது. ஆனால், முந்தைய ஆட்சியில் ராணுவம் தயார்நிலையில் இல்லை. ராணுவத்தின் தேவைகள் பல முறை முன்வைக்கப்பட்டும், அவை நிறைவேற்றப்பட வில்லை.
அயோத்தி ராமர்கோயில் பிரச்னையில் சிலர் தேவை யில்லாமல் தொடர்ந்து பேசிவருவது எனக்கு வியப்பளிக்கிறது. அயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றம் இப்போது விசாரித்து வருகிறது. எனவே, இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தை மதித்து நடக்க வேண்டும். அயோத்தி விவகாரம் குறித்து தொடர்ந்து பேசி வருபவர்களுக்கு நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். நமது நீதித்துறை மீது நம்பிக்கைவைக்க வேண்டும்; தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் அது.
பாஜக தலைமையிலான அரசு மத்தியில் இரண்டாவது முறையாகப் பதவியேற்றவுடன், ஒரு பிரதமராக மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; அரசின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும்; அதன் மூலம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். இதன்விளைவாக ஆட்சியின் முதல் 100 நாள்களில் முக்கிய வாக்குறுதிகளை (ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்ததைக் குறிப்பிடுகிறார்) நிறைவேற்றியுள்ளோம். இந்தியாவை சர்வதேசளவில் மிகப்பெரிய சக்தியாக முன்னிறுத்தியுள்ளோம். உலகநாடுகள் அனைத்தும் இந்தியாவின் நட்புறவை விரும்புகின்றன. சர்வதேச அளவில் நமது நாட்டின் கெளரவம் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு உயர்ந்துள்ளது. விவசாயிகளின் வருவாய் உறுதித் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.20,000 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் குறித்து அண்டை நாடு (பாகிஸ்தான்) என்னகருத்தைக் கொண்டுள்ளதோ, அதேகருத்தை காங்கிரஸ் தலைவர்கள் (ராகுல்) கொண்டுள்ளதில் எனக்கு வியப்பு ஏதுமில்லை. ஆனால், இந்தவிஷயத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் போன்ற மூத்த தலைவர்கள், வாக்குவங்கி அரசியலைக் கருத்தில் கொண்டு பேசுவது எனக்கு வருத்தமளிக்கிறது
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம், தேச ஒருமைப்பாடு நிலைநிறுத்தப் பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்களின் கனவுகளையும், எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. காஷ்மீர் மக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களையும், துயரங்களையும் சந்தித்துவந்ததற்கு முந்தைய காங்கிரஸ் அரசுகள்தான் காரணம். இப்போதைய அரசு காஷ்மீரில் ஒருபுதிய சொர்க்கத்தை உருவாக்கி வருகிறது. காஷ்மீரில் அனைவரையும் மத்திய அரசு அரவணைத்துச் செல்கிறது.
காஷ்மீரில் எல்லைக்கு அப்பால் இருந்துவந்த பயங்கரவாதம்தான் இத்தனை ஆண்டுகளாக பிரச்னையாக இருந்துவந்தது. இப்போது, அதனை உறுதியாக முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு இத்தனை ஆண்டுகள் நீடித்துவந்த வன்முறை, பயங்கரவாதம், பிரிவினைவாதத்துக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. அங்கு இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம் வளர்ச்சி உறுதி செய்யப்படும்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசியதாவது:
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |