இந்திய ராணுவத்தை பலப்படுத்திய மோடி

இந்திய ராணுவத்தின் புகழ்பெற்ற வரலாறு, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானது. ராமாயணம் மற்றும் மகாபாரதம் காலம் தொட்டு நாட்டையும், நாட்டு மக்களையும் காக்கின்ற மகத்தான பணியில், தன்னை ஈடுபடுத்தி வருகிறது.

உலக வரலாற்றில் மிகவும் பெருமை வாய்ந்த மற்றும் பழமை வாய்ந்த ராணுவமாக இந்திய ராணுவம் திகழ்கிறது. குருக்ஷேத்திரத்தில் நடந்த மகாபாரதப் போரில், 4 லட்சம் ராணுவ வீரர்கள் காலாட் படை, குதிரைப் படை, தேர்ப்படை மற்றும் யானைப்படை ஆகிய படைகள் கொண்ட மாபெரும் பிரமிக்கத்தக்க வீரம் வாய்ந்த படைகளாக, வீரப் போர் புரிந்து, தர்மத்தை நிலைநாட்டியதை அறிவோம். ‘உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை’ எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும் என்பதற்கு ஏற்ப,10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நம் அரசர்கள் ராணுவத்தை செம்மைப்படுத்தி, மிகச்சிறந்த நாட்டின் செல்வமாக உருவாக்கி இருந்தனர் என்பதை, நம்மால் காண முடிகிறது.தன் வீரத்தால், உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் முத்திரை பதித்த, இந்திய ராணுவத்தில் ஒரு ராணுவ வீரனாய் என் பயணத்தை, 1989ல் துவங்கும் மிகப்பெரிய பாக்கியத்தை பெற்றேன்.கடந்த, 1954ல் பிரிட்டிஷ் ராணுவத்தால் உருவாக்கப்பட்ட, எஸ்.எல்.ஆர்., என்று கூறப்படும் துப்பாக்கியில், 1989ல் பயிற்சி பெற்றேன். 35 ஆண்டுகள் கடந்த தொழில்நுட்பம் கொண்ட எஸ்.எல்.ஆர்., துப்பாக்கி, முக்கிய ஆயுதமாக இந்திய ராணுவத்தில் அங்கம் வகித்த அந்த அவல நிலையை கண்டு, மனம் வருந்திய காலம் அது.’எம்16ஏ2, ஏ.கே., 74′ போன்ற அதிநவீன துப்பாக்கிகள், மற்ற மேலை நாடுகளின் ராணுவத்தில், அதே சமயத்தில் உபயோகிக்கப்பட்டு வந்தது.

சீன ராணுவம், 1985 முதல் அதிநவீன ‘டைப் 81’ துப்பாக்கியை, முழுமையாக தன் தரைப்படையில் கொண்டு வந்துவிட்டது. ஆனால், இந்திய ராணுவத்தில் மிகப் பழமையான தொழில் நுட்பம் கொண்ட எஸ்.எல்.ஆர்., துப்பாக்கி, 1963 முதல் இந்திய ராணுவத்தின் 1997 வரை முக்கிய போரிடும் துப்பாக்கியாக, தரைப்படை ராணுவ வீரர்களுக்கு இருந்து வந்தது. கடந்த, 35 ஆண்டுகளில், 10 பிரதமர்கள் நம் நாட்டை ஆண்டு இருந்தாலும், 1963ல் இருந்து 1997 வரை இந்திய ராணுவத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பது, மிகவும் வருத்தத்திற்குரிய வரலாறாகும்.சுதந்திரம் அடைந்ததிலிருந்து, பாதுகாப்பு துறை கொள்முதல் என்ற பெயரில் பலமுறை, பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்து, இந்திய ராணுவத்தை மற்றும் பாதுகாப்பை பின்னடைய வைத்த பெருமைக்கு உரியவர்களை பார்க்கலாம்.l ஜீப் ஊழல் – சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல், ஜவஹர்லால் நேருவின் காங்கிரஸ் பரிசுl நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் – இந்திரா காலத்தைச் சேர்ந்த ஒன்றுl ‘போபர்ஸ்’ ஊழல் – ராஜிவ் ‘அனைத்து ஊழல்களின் தாய்’l ‘அகஸ்டாவெஸ்ட்லேண்ட்’ — சோனியா ஊழல் நிறைந்த வி.வி.ஐ.பி., ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தின் உந்து சக்திl ‘டாட்ரா’ லாரி ஊழல் – சோனியா மற்றும் சகாப்தம்l ‘ஸ்கார்பீன் டீல்’ ஊழல் -சோனியா மற்றும் ராகுல் காலத்தில், காங்கிரசின் ஊழல் ஆழ்கடல் நோக்கி நகர்ந்த நேரம்.

நவீனத்தின் அடிக்கல்

இந்திய ராணுவத்தில், 1997 வரை உபயோகத்தில் இருந்த, மிகப் பழமையான இரண்டாம் உலகப் போரில், உபயோகப்படுத்திய துப்பாக்கிகளை மாற்றி, நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ‘இன்சாஸ்’ ரக துப்பாக்கிகளை, இந்திய ராணுவத்திற்கு கொடுத்து, இந்திய ராணுவத்தை வலிமைப்படுத்துவதற்கான முயற்சியின், மிக முக்கியமான முதல் பங்கு, மறைந்த பிரதமர் மதிப்பிற்குரிய வாஜ்பாயை சாரும்.பாராளுமன்ற அறிக்கையும் குறைபாடும்கடந்த, 2012ல் பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கையின்படியும், 24வது தரைப்படை தளபதி ஜெனரல் வி.கே. சிங்கின் அறிக்கைபடியும், இந்திய ராணுவம் மிக மோசமான குறைபாடுகளுடன் இருந்ததை வரலாறு பதிவு செய்துள்ளது.

ராணுவ மேம்பாடும் நரேந்திர மோடி அரசும்

இந்த நிலையை மாற்ற பாதுகாப்பு மற்றும் இந்திய ராணுவத்தை மேம்படுத்துதல் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவை, கடந்த எட்டு ஆண்டுகளாக நரேந்திர மோடியின் அரசும் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பல முக்கிய கொள்முதல்களை, மோடி அரசு துரிதமாக சிறந்த முறையில் செயல்படுத்தி உள்ளது. காலாட்படைக்கான அமெரிக்காவின் புதிய, ‘எஸ்.ஐ.ஜி., 716’ ரைபிள்கள், விமானப்படைக்கு பிரான்சில் இருந்து ரபேல் ஜெட் விமானங்கள் அல்லது சினுாக் ஹெவி லிப்ட் மற்றும் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் அல்லது ரஷ்யாவின் ‘எஸ் 400’ வான் பாதுகாப்பு அமைப்பு போன்றவை சோதித்து, நம் நாட்டிற்கு ஏற்றவாறு மறு வடிவமைப்பு செய்து, அவற்றை இந்திய ராணுவத்திற்கு தந்து, இந்திய ராணுவத்தின் வலிமையை உறுதிப்படுத்தியுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

உள்நாட்டு கொள்முதல்களில் ‘கே9’ வஜ்ரா பீரங்கிகள், அணுசக்தி மற்றும் ஏவுகணைகள் போன்றவை நாட்டின் பாதுகாப்பிற்கு வலிமை சேர்த்துள்ளன.இந்திய தரைப்படைஇந்திய தரைப்படையின் வலிமையை, மேலும் சிறப்பிக்க நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் மார்க் ஒன்று, ‘ஏ’ வகை 118 பீரங்கிகளை சேர்க்க உள்ளது. ‘ஏகே’ 203 துப்பாக்கிகளை இந்தியாவிலேயே தயாரிப்பதற்காக, 5,100 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதைத் தவிர, எதிரிகளை தாக்கி அழிக்கும் பலவித ஏவுகணைகள், நம் நாட்டிலேயே தயாரித்து, மேம்படுத்தி இந்திய தரைப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.இந்திய விமானப்படைஇந்திய விமானப்படையை வலிமை சேர்க்க, 32 ரபேல் ரக விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதைத் தவிர 32 கம்பாட் போர் விமானம் தேஜஸ் சேர்க்கப்பட்டுள்ளது. அப்பாச்சி மற்றும் சினுக்ஸ் போர் ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வானிலிருந்து, வானில் தாக்கக்கூடிய மற்றும் வானில் இருந்து தரையை தாக்கக்கூடிய, பிரமோஸ் ஏவுகணைகள், விமானப்படையின் வலிமையை சேர்த்து உள்ளன.இந்திய கப்பற்படைநம் நாட்டிலேயே தயாரித்த ஐ.ஏ.சி., விக்ராந்த் போர் விமானம் தாங்கிய கப்பல், கப்பற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

எதிரிகளை கடலுக்கடியிலிருந்து தாக்கும், ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் நம் கப்பற்படைக்கு வலிமை சேர்த்து உள்ளன. இதைத் தவிர நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள், கப்பற்படையின் பலத்தை வலிமை படுத்தியுள்ளன. எல்லைப்பகுதி மேம்பாடுராணுவ தளவாடங்களை மேம்படுத்துவதை தாண்டி, எல்லைப்பகுதியில் சாலைகள், மேம்பாலங்கள், விமான தளங்கள், ஹெலிகாப்டர் தளங்கள், ராணுவ தளவாட கிடங்குகள், ராணுவ வீரர்களுக்கான நிரந்தர பங்கர்கள் அமைத்தல் போன்ற பணிகளிலும், போர்க்கால அடிப்படையில் பல ஆயிரம் கி.மீ., வரை நம் நாட்டின் எல்லைப் பகுதியை மேம்படுத்தி, பாதுகாப்பிற்கான பாதுகாப்பை, பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்.

நம் ராணுவம், சீன எல்லையில் மிகச்சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. லடாக் செக்டாரில் பாங்காக் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள சீன எல்லைப் பகுதிகளில் பல உள்கட்டமைப்புகளை கொண்டு வந்து, இந்திய ராணுவத்தின் தரைப்படை மற்றும் விமானப்படையின் எண்ணிக்கை அதிகரித்து, சீன ராணுவத்தின் எந்த தவறான நடவடிக்கையையும் எதிர்கொண்டு தாக்கி அழிக்கும் வகையில், மிகச்சிறந்த கட்டுமானங்களையும், அமைப்புகளையும் வடிவமைத்துள்ளதுசீனாவிற்கு பதிலடிகால்வான் பள்ளத்தாக்கு சம்பவத்திலும் மற்றும் அதை தொடர்ந்து நடந்த பல சம்பவங்களிலும், உலகையே மிரட்டும் சீன ராணுவத்திற்கும் தகுந்த பாடம் கற்பித்து, நம் ராணுவத்தின் வலிமையையும், நாட்டின் வலிமையையும், தலைமையின் பண்பையும், நரேந்திர மோடி பறைசாற்றி உள்ளார்.’டிபென்ஸ் காரிடர்’ திட்டம்பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் போன்ற அனைத்தும் ஒன்றிணைந்து,

இந்திய ராணுவத்திற்காக கருவிகளை உற்பத்தி செய்யும் ஓர் உற்பத்தி கேந்திரத்தை, நம் நாட்டில் உருவாக்கி, பல அதிநவீன போர் கருவிகளையும், ஆயுதங்களையும், ராணுவத்திற்கு தேவையான உபகரணங்களையும் உண்டாக்கி, அதன் மூலம் இந்திய ராணுவத்தை மேம்படுத்துவதற்கும், நம் ராணுவ உற்பத்தி உபகரணங்களை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலமாக, அன்னியச் செலாவணி ஈட்டுதல் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற மிகப்பெரிய தொலைநோக்கு பார்வையுடன் வடிவமைத்துள்ளார்.இந்தியாவில் டிபென்ஸ் காரிடர் அமைப்பதற்கான தொழிற்சாலை நிறுவ, இரண்டு மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டாலும், முதன் முதலில் தமிழகத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளது. l இதன் மூலம், 310 ராணுவ கருவிகள் மற்றும் தளவாடங்கள் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும்.

நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் ராணுவ தளவாடங்களையும், கருவிகளையும் வாங்குவதற்காக, 84 ஆயிரத்து 598 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. l 25 சதவீதம் ராணுவ ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, புதிதாக துவங்கும் தொழிற்சாலைகளுக்கும், இளைஞர்களுக்கும் உதவ வழி வகுக்கப்பட்டுள்ளது. l இதன் மூலம் பல குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் மேன்மை அடையும்; பல லட்சம் வேலைவாய்ப்புகள் உண்டாகும்.l இதைத்தவிர போக்குவரத்து உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி, மனித வள மேம்பாடு மற்றும் பொருளாதாரம் போன்றவை மேன்மையடையும். l ஏற்றுமதி 334 சதவிகிதம் அதிகரித்து உள்ளது.l ராணுவ தளவாடங்கள், 84 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.’ஆத்மநிர்பர் பாரத் அபியான்’மத்திய அரசின், ஆத்மநிர்பர் பாரத் அபியான் முயற்சிக்கு, இந்திய ராணுவம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பல உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் இந்தியத் தொழில்துறையின் பிரத்தியேக உரிமையுடன், வெற்றிகரமாக பல முன்னேற்றங்களை கண்டுள்ளது.

இதன் மூலம் ட்ரோன்கள்/யு.ஏ.வி.,கள், பல்வேறு திறன்களைக் கொண்ட எதிர்-ட்ரோன்/யு.ஏ.வி., அமைப்புகள், மிகவும் துல்லியமான சிறிய ஆயுதங்கள், சிறந்த பாதுகாப்பு உபகரணங்கள், பீரங்கிகள், வான் பாதுகாப்பு, தொலைத் தொடர்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளித்துள்ளது.வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிலை முதல் இறுதி சோதனை நிலை வரை, ஏராளமான உள்நாட்டு மயமாக்கல் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பாதுகாப்புத் துறையில் தன்னம்பிக்கையை அதிகரிக்க, நம் பிரதமர் பல முயற்சிகளை மேற்கொண்டு, நடப்பு நிதியாண்டில் இன்று வரை, 20 ஒப்பந்தங்களில், 19 ஒப்பந்தங்கள் உள்நாட்டு ஒப்பந்தங்கள் ஆகும். இதன் மதிப்பு, 33,871 கோடி ரூபாய். இந்திய ராணுவம், செயற்கை நுண்ணறிவு, ‘5ஜி’ குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் வான்வழி பாதுகாப்பு ஆகியவற்றில் உலகிலேயே மிகச் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட நாடாக திகழ்வதற்கு, ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி பாதையில், மத்திய அரசு பல முன்னேற்ற நடவடிக்கைகளை செய்துள்ளதே காரணம்.

இது நம் நாட்டிலேயே பலவிஞ்ஞானிகளை உருவாக்குவதற்கும், பல போர் கருவிகள் உற்பத்தி செய்வதற்கும், மற்றும் நம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மிக முக்கியமான அம்சமாக திகழும்’அக்னிபத்’ திட்டம்நம் நாடு மிகவும் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத புவி அரசியல் பாதுகாப்பு சவால்களை எதிர் கொண்டிருக்கும் இந்த காலத்தில், இந்திய ராணுவத்தின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாடு மிக முக்கியமான ஒன்றாகி விட்டது. ஆகையால், இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முறையை மேம்படுத்துவதற்கான மிக முக்கியமான முயற்சியில் ஈடுபட்டு, அக்னிபத் என்ற புதிய திட்டத்தை பரந்த நோக்கத்தோடு கொண்டு வந்துள்ளது. இதன் முக்கிய நோக்கங்கள்.l இந்திய ராணுவத்தில் இளைஞர்களின் சதவிகிதத்தை அதிகரிப்பது l கல்லுாரிகளில் படிக்கும் திறமை வாய்ந்த இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பது.l தேசிய நலன் கருதும் இளைஞர்களை உருவாக்குவது.

ராணுவத்தில் சிறிது காலம் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்துவது.வள்ளுவன் கண்ட தலைவன்நம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய ராணுவத்தை வலுவாக்க ஆயுதங்கள், கருவிகள், பயிற்சி, தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் கட்டமைப்புகள் துரிதமாக மேம்படுத்தப்பட்ட நிலையில் தரைப்படை, விமானப்படை, மற்றும் கடற்படை எந்த நேரத்திலும் எதிரியை துவம்சம் செய்யும் வலிமை படைத்ததாக போரிட தயாராக உள்ளன என்பதில் சந்தேகமில்லை.கொரோனா பெரும் தொற்று, பொருளாதார சரிவு, போர் கால நிலை, எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி மற்றும் நாட்டை துண்டாட நினைக்கும் தீய சக்திகள் மத்தியில் உலகமே போற்றும் ஒரு இரும்பு மனிதனாய், மிகச்சிறந்த தலைவனாய், படைமாட்சி வள்ளுவன் கண்ட படையை உருவாக்கிய நின் தலைமை படைக்கும் இவ்வையகத் திற்கும் பெருமை சேர்க்கும். வாழ்க பல்லாண்டு… ஜெய்ஹிந்த்! ஜெய் பாரத்! – ‘லெப்டினன்ட் கர்னல்’ நா.தியாகராஜன்

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. பாதுகாப்புத்துறை ஆலோசகர் மற்றும் அரசியல் விமர்சகர்.

நன்றி தினமலர் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...