370 நீக்கம் பாஜக தேர்தல் அறிக்கையிலேயே உள்ளதுதான்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசிய லமைப்பு சட்டம் 370 பிரிவு நீக்கப்பட்டுள்ளதை அந்தமாநில மக்கள் வரவேற்றுள்ளனர்.  அங்கு விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும்,  தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் கூறினார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மாவட்ட பாஜக சார்பில் மக்கள் சந்திப்புக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் கே.ஜெகநாதன் கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.  அதைத் தொடர்ந்து பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாநில தலைவருமான இல.கணேசன்  சிறப்புரையாற்றி யதாவது: காஷ்மீர் மாநில சிறப்புஅந்தஸ்து பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டது, பாஜக ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் கூறிவந்தது தான்.  தற்போது பாஜக 2-ஆவது முறையாக பொறுப்பேற்றவுடன், ஜனநாயக முறையில் நாடாளுமன்றத்தில் இருஅவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றி,  மக்கள் பிரதிநிதிகள் ஒப்புதலோடுதான் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.  இதில் எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல்,  ஜனநாயகம் மீறும் செயல் அல்ல.

காங்கிரஸ் ஆட்சியின் போதுதான்,  யார் ஒப்புதலும் இல்லாமல்,  ஜனநாயகத்துக்கு விரோதமாக தன்னிச்சையாக அவசர நிலை பிரகடனம் இரவோடு இரவாகச் செய்யப்பட்டது.  இதனால் ஜனநாயகம் குறித்துபேசும் தகுதி காங்கிரஸூக்கு இல்லை. மேலும், நாட்டில் லஞ்ச ஊழல் எந்த உருவிலும் இருக்கக்கூடாது என்று தான்,  அனைவருக்கும் வங்கி எண், ஆதார் அட்டை, பான்கார்டு கொண்டு வரப்பட்டுள்ளது.  தற்போது ஒரே அட்டை  கொண்டுவரும் திட்டமும் உள்ளது. இதனால் ஊழல் தடுக்கப்படும் என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம்  இல.கணேசன் பேசியது:  ஜம்முகாஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.  இதனால் காஷ்மீரில் சில பிரச்னைகள் இருந்தாலும்,  காலப்போக்கில் அது நீங்கிவிடும். தற்போது பொருளாதார சீரமைப்புகளை நோக்கியே நிதி அமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.    பெரியதொழில் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், சிறு-குறு தொழில்கள் வளர்ச்சிக்கும் மத்தியஅரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கிறது.  அதிமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.  அதேபோல உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக -பாஜக கூட்டணி போட்டியிடும் என்றார் இல.கணேசன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...